விடுதலைப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் பிறந்த நாள்.

 


இன்று -  விடுதலைப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் பிறந்த நாள். சந்திரசேகர ஆசாத் 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23  ஆம் நாள் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சபுவா மாவட்டத்திலுள்ள “பாப்ரா” என்ற இடத்தில் சீதாராம் திவாரிக்கும், ஜக்ராணி தேவி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.. இளைஞரான சந்திரசேகர் உடற்பயிற்சி, நீச்சல், வில்வித்தை பற்றும் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமிக்கவராக இருந்தார் தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர். ஒரு துடிப்பு மிக்க இளைஞனாக மட்டுமல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மாபெரும் புரட்சிவாதியாக திகழ்ந்த. சந்திரசேகர ஆசாத், பகவத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு” என உருவாக்கினர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் மீது தேச துரோக குற்றம் சாட்டியது. இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது .

1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் அலகாபாத்திலுள்ள “அல்ப்ரெட்” பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றிவளைக்கப்பட்டார். நீண்ட நேரம் ஆங்கில காவல் துறையினரிடம் போராடிய அவர், காலில் குண்டடிபட்டு தப்பிசெல்லமுடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், வெள்ளையர்களிடம்  சிக்கிவிட கூடாது என முடிவெடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிர் துறந்தார். அவர் உயிர்  துறந்த பூங்காவே அவருக்கு நினைவிடமாக மாற்றப்பட்டு பராமரிக்காப்பட்டு வருகிறது. அப்பூங்காவின்   நடுவில் அவருக்கு உருவ சிலையொன்றும் எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் எண்ணற்ற பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் சாலைகள் அவரது பெயரிடப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,