பால கங்காதர திலகர்
வரலாற்றில் இன்று ஜூலை 23, 1856. இந்திய விடுதலப் போராட்ட தலைவர் லோகமான்ய பால கங்காதர திலகர் பிறந்தார். மகராஷ்டிர மாநிலத்தில் ரத்தினகிரி மாவட்டத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து ஆச்சார அனுஷ்டானங்களை தவறாது கடைப்பிடித்து வந்தவரான திலகர் வளர்ந்தபின்னர் தீவிரவாத கருத்துக்கள் கொண்ட விடுதலைப் போராட்ட வீராராகத் விளங்கினார். வ. உ சிதம்பரனார் கைது செய்யப்பட்டபோது அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆறு ஆண்டுகள் சிறை வாசமிருந்திருக்கிறார். "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதனை நான் அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார் திலகர்.
Comments