தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்
தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்
1. முதலில், துருப்பிடித்த அந்தக் கல்லை, எடுத்து அடுப்பின் மீது வைத்து நன்றாகக் காயவிடுங்கள். அதிலிருந்து அப்படியே புகை கிளம்பும், அவ் அளவிற்கு காய வைக்க வேண்டும். இடுக்கியோ, பிடி துணியோ, கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.
2. தோசை கல் நன்கு காய்ந்ததும் குறைந்த தீயில் அடுப்பை மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை எடுத்து அதன் மீது தூவுங்கள். பின்னர் ஒரு மூடி எலுமிச்சை பழத்தை முழுதாக பிழிந்து கொள்ளுங்கள்
3. பிறகு அந்த எலுமிச்சை பிழிந்த மூடியை வைத்தே 5 லிருந்து 10 நிமிடம் வரை துரு இருக்கும் இடங்களில் நன்கு பரபரவென்று தேயுங்கள். அடுப்பின் சூட்டிலேயே உப்பை வைத்து எலுமிச்சை சாறுடன் தேய்ப்பதால் துரு கரை முழுவதுமாக நீங்கிவிடும்.
4. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தோசை கல்லை கீழே திருப்பி போட்டு, பின்புறமும் இதே போல உப்பை தூவி எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு தேய்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு தோசை கல்லை இரும்பு நார் கொண்டு நன்கு தேய்த்து தண்ணீரில் நன்கு ஒரு முறை கழுவி கொள்ளுங்கள்.
5. அதன் பிறகு சமையல் எண்ணெயை நன்கு எல்லா இடங்களிலும் தடவி, அரிசி வடித்த கஞ்சி தண்ணியை ஊற்ற 24 மணிநேரம் ஊற வைத்து விடுங்கள். பின்பு, மீண்டும் மறுநாள் நன்றாக கழுவி வைத்து கொள்ளுங்கள்.
6. நீங்கள் தோசை ஊற்றுவதற்கு முன்பு பாதி அளவு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக நறுக்கி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு அனைத்து இடங்களும் படும்படியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் மொத்த துரு கரையும் நீங்கி விடும். தோசை கல் புத்தம் புதியதாக மாறிவிடும். பின்னர், இதில் தோசை சுட்டு பாருங்கள் ஹோட்டல் மாஸ்டர் தோற்று போகும் அளவிற்கு மொறு மொறு தோசை சுட முடியும்.
OUR YOUB TUBE CHANNEL
PEOPLE TODAY NEWS SOON
Comments