கவிப்பேரரசு வைரமுத்து,
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து, பிறந்த நாள் இன்று - ஜூலை 13, 1953, தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980 இல் “நிழல்கள்” திரைப்படத்தில் “இது ஒரு பொன்மாலைப் பொழுது..” எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இதுவரை 6000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்
சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.
அதேபோல் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருதும் வாங்கியுள்ளார். கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களிலும் 37 நூல்கள் எழுதி யுள்ளார். இதுபோல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த நாள் இன்று
Comments