மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி பிறந்த நாள்’

 


இன்று ஜூலை 25, 1929 -மக்களவை முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி பிறந்த நாள்’  அசாம் மாநிலம் தேஸ்பூரில் பிறந்த சோம்நாத் சட்டர்ஜி, தனது படிப்பை கொல்கத்தாவிலும், இங்கிலாந்திலும் முடித்தார். சிறந்த சட்ட மேதையான இவர், இங்கிலாந்தில் இருந்து பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

இவரது தந்தையான என்.சி.சட்டர்ஜி அகில பாரத இந்து மகாசபாவின் ஆதரவாளர் ஆவார். அந்த அமைப்பின் தலைவராகவும் அங்கம் வகித்துள்ளார். எனினும் சோம்நாத் சட்டர்ஜி கம்யூனிச கொள்கைகளில் நாட்டம் கொண்டு இருந்தார். அதன்படி 1968-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து முன்னணி தலைவராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார்.

இவர் முதல் முறையாக 1971-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004-ம் ஆண்டு வரை 10 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வான இவர், 

1989-ம் ஆண்டு முதல் 2004 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்களவை தலைவராக அவர் பணியாற்றினார். அத்துடன் ஏராளமான நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகும் வாய்ப்பும் பெற்றார். சிறந்த நாடாளுமன்ற அறிவு பெற்றிருந்தமையால் மக்களவை சபாநாயகர் பதவி 2004-ல் இவரை தேடிவந்தது. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் எவ்வித பாரபட்சமுமின்றி சபையை நடத்தினார்.

இவரது பதவிக்காலத்தில் இருந்துதான் மக்களவையின் பூஜ்ஜிய நேர நடவடிக்கைகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. மேலும் 24 மணி நேர லோக்சபா தொலைக்காட்சி சேனலும் இவரது பதவிக்காலத்திலேயே தொடங்கப்பட்டது. அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2008-ல் திரும்ப பெற்றது. எனவே இவரை பதவி விலகுமாறு கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக்கொண்டது.

ஆனால் சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல எனக்கூறி, பதவி விலக அவர் மறுத்து விட்டார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2009-ல் தீவிர அரசியலில் இருந்தும் சோம்நாத் சட்டர்ஜி விலகினார். ஆகஸ்ட் 13, 2018 அன்று மரணமுற்றார்
Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,