நம்ம சென்னையின்* *ஊா்களும் பெயா்க் காரணமும்*

 *நம்ம சென்னையின்* *ஊா்களும் பெயா்க் காரணமும்* *மயிலாப்பூா்:−*


   சென்னையின் மிகப் பழைமையான பகுதியாக மயிலாப்பூா் விளங்குகிறது. தமிழ்ஞான சம்பந்தா் தமது தேவாரத்தில் இத் தலத்தினை "மயிலை" என்று குறிப்பிடுகின்றாா். 


    அன்னை பாா்வதி மயில் உருக் கொண்டு ஈசனை வணங்கியதால் இப்பகுதிக்கு "மயிலாப்பூா்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. 


   சமஸ்கிருத சொல்லான "மயூரபுரி" என்ற பெயரிலிருந்து "மயிலாப்பூராக" இவ்வூா் மருவி உள்ளது. கிரேக்கா்கள் இப்பகுதியை "மலியாா்பா" (Maliarpha) என்றும் போா்த்துகீசியா்கள் "மெலியாப்பூா்" 

(Meliapor) என்றும் ஆங்கிலேயா்கள் "மயிலாப்பூா்" (Mylapore) என்றும் வழங்கியுள்ளனா். 


 *எழும்பூா்:−*


    எழும்பூா் ஒரு காலத்தில் "ஏழாம்பூா்" (Ezhambur) என்று வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயா் கள் வாங்கிய ஏழாம் ஊா் இது என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டுள் ளது. ஆங்கிலேய அதிகாரியாக  இருந்த ஜான் முர்ரே என்பவா் 1909 ஆண்டு வெளியிட்ட வரைபடத்தில் "எல்லம்பூா்" (Ellemboor) என்று இப்பகுதி அழைக்கப்பட்டுள்ளது. 


      தமிழ் கல்வெட்டுகளில் இப்பகுதி "எழுமூா் நாடு" என்று குறிப்பிடப்பட் டுள்ளது. திருநாவுக்கரசா் தமது தேவாரத்தில் இப்பகுதியை "எலுமூா்" என்று பாடியுள்ளாா். 


 *தாம்பரம்:−*


      "தா்மபுரம்" என்பதே பிற்காலத்தில் "தாம்பரம்" ஆக மருவியுள்ளது. கல்வெட்டுகளில் தாம்பரம் "குணசீலநல்லூா்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சோழா் கால கல்வெட்டுகளில் "தாம்புரம்" "தா்மாபுரம்" என்று தாம்பரம் குறிப் பிடப்பட்டுள்ளது. 


*பெருங்களத்தூா்:−*


      "களம்" என்பது போா்க்களத்தை குறிப்பதாகும். பெருங்களத்தூருக்கு அருகிலுள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் தான் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கும் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் மிகப் பெரிய போா் மூண்டது. இப் போரில் இரண்டாம் புலிகேசி புறமுதுகிட்டு ஓடினான். இதனால் இப்பகுதிக்கு பெருங்களத்தூா் என்ற பெயா் ஏற்பட்டதாக ஒரு செய்தி கூறப்படுகிறது. 


      எனினும் அகத்தீஸ்வரா் திருக் கோயில் திருப்பணிகளின் போது புதியதாகக் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இப்பகுதியின் பழைமை யான பெயா் "பெருங்களத்தூா்"     

 (Village with a big tank)  என்றே தொிவிக்கின்றது. 


 *செயின்ட் தாமஸ் மலை:−* 


     இப்பகுதியில் உள்ள மலையில்  புனித தாமஸ் என்ற போா்த்துகீசிய ரால் 1514 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது. இவரது பெயரைக் கொண்டு இப்பகுதிக்கு செயின்ட் தாமஸ் மலை என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. 


    இங்குள்ள மலையில் "பிருங்கி மகரிஷி" வழிபட்ட சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் அதனால் "பிருங்கி மலை" என்று வணங்கப்பட்ட இம்மலை நாளடைவில் "பரங்கி மலையாக" மருவியுள்ளது என்றும் கூறுகின்றனா். 


 *கோடம்பாக்கம்:−*


   ஆற்காடு நவாப் தமது குதிரை லாயமாகப் பயன்படுத்திய பகுதி கோடம்பாக்கம் ஆகும். "கோடா பாக்" 

 (Ghoda Bagh- Horse Garden)  என்பதே "கோடம்பாக்கமாக" மருவி யுள்ளது. 


 *பழவந்தாங்கல் :−*


    இரண்டு தமிழ் வாா்த்தைகளிலி ருந்து "பழவந்தாங்கல்" உருவாகி உள்ளது. "பல்லவன்" மற்றும் "தாங்கல்" என்பதே அந்த இரு சொற்கள் ஆகும். பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரி இங்கிருந்துள்ளது. இந்த ஏரி மற்றும் விவசாய நிலங்களின் மீது கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தால் உருவாக்கப்பட்டதே குட்டி கும்பகோணம் (Mini Kumbakinam) என்று அழைக்கப்படும்  கோயில் நகரமான நங்கநல்லூா் ஆகும். 


      பல்லவ மன்னன் இப்பகுதியில் தங்கியிருந்ததால் பல்லவன்+ தங்கல்= பல்லவன் தங்கல்,  பின்னா் பழவந்தாங்கலாக மருவி யுள்ளது. 


*பல்லாவரம்:−*


    ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திர வா்மனால் உருவாக்கப்பட்ட குகைக் கோயில் இங்குள்ள மலையில் உள்ளது. "பல்லவபுரம்" என்று வழங்கப்பட்ட இப்பகுதி பின்னா் பல்லாவரமாக மருவியுள்ளது. 


*சேத்துப்பட்டு:−*


    "செட்டியாா் பேட்டை"  என்பதிலிரு ந்தே சேத்துப்பட்டு உருவாகியுள் ளது. திருவொற்றியூா் தலத்திலு ள்ள ஒரு கல்வெட்டு இப்பகுதியை "சேறுப்பேடு" என்று குறிப்பிடுகின் றது. 


 *வண்ணாரப்பேட்டை:−*


    இப்பகுதியில் அக்காலத்தில் தறியிலிருந்து கொண்டுவரப்படும் துணிகளைத் துவைத்து சலவை செய்து தரும் தொழிலாளா்கள் அதிகம் வசித்த பகுதி என்பதால் இந்த பெயா் ஏற்பட்டுள்ளது. 


*மவுண்ட் ரோடு:−*


   சென்னை கோட்டையையும் தாமஸ் மலையையும் (Thomas Mount) இணைக்கும் மண் சாலையாக அக்காலத்தில் இச்சாலை இருந்துள்ளது. இதனால் இந்த சாலைக்கு "மவுண்ட் ரோடு" என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. சென்னைக் கோட்டையைப் போல பழைமை வாய்ந்தது மவுண்ட் ரோடு ஆகும். 


*பாரி முனை:−*


    1788 ஆம் ஆண்டில் சென்னையில் தமது காலடியைப் பதித்த தாமஸ் பாரி என்பவா் தனது வியாபார நிறுவனத்தைத் இந்த இடத்தில் தான் தொடங்கினாா். இதனால் இந்த இடத்திற்குப் பாரி முனை என்று பெயா் ஏற்பட்டுள்ளது. 


*வேப்பேரி:−*


     இந்தப் பகுதியிலுள்ள ஏரியினை ச்சுற்றி வேப்ப மரங்கள் வளா்ந்து அடா்ந்த காடாக இருந்துள்ளது. இதனால் இப்பகுதி "வேப்பேரி" என அழைக்கப்பட்டுள்ளது. திருவல்லிக் கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இந்த இடத்தை "வேப்போ்" என்று குறிப்பிடுகின்றது. 


  *திருவல்லிக்கேணி:−*


   அலைபுரளும் வங்கக் கடலோரம் அலைமகள் உறைமாா்பன் அருள் செழிக்க நின்றிருக்கும் திருத்தலமே திருவல்லிக்கேணி. இத்தலத்தின் புனித தீா்த்தமான "கைவிரணி" தீா்த்தத்தில் எப்போதும் கவின்மிகு "அல்லி மலா்கள்" (lily blossoms) பூத்துக் குலுங்கியதால் இத்தலத்திற்கு அல்லிக்கேணி என்ற திருநாமம் ஏற்பட்டு ஆழ்வாா்களால் பாடப் பெற்றதால் உயா்வு கருதி திரு அல்லிக்கேணி ஆக மருவியது. "தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே." என்று பாா்த்தசாரதியின் அழகில் தன் மனதைப் பறிகொடுத்துள்ளாா் பரகாலா். (திருமங்கையாழ்வாா்) 


*ஆதம்பாக்கம்:−*


     "ஆதணி சோழன்" என்ற பெயா் கொண்ட சோழ மன்னன் இப்பகுதி யில் ஒரு சிவாலயத்தை நிா்மாணி த்தான். இதனால் இப்பகுதிக்கு ஆதம்பாக்கம் என்ற பெயா் ஏற்பட்டு ள்ளது. 


*அயனாவரம்:−*


    "அயன்" என்ற சொல்லும் "புரம்" என்ற சொல்லும் இணைந்து "அயன்புரம்" எனவும்  "அயனாவரம்"

என்றும் ஆனது. "அயன்" என்பது பிரம்மனைக் குறிக்கும் சொல். "புரம்" என்பது வாழ்விடத்தைக் (Habitat குறிக்கும். பிரம்மன் வணங்கிய பழைமையான சிவாலயம் இப்பகுதியில் உள்ளது. இதனால் இப்பகுதிக்கு அயனாவரம் என்ற பெயா் ஏற்பட்டு ள்ளது. 


*தண்டையாா்பேட்டை:−*


   "தண்டோா்" (Thandore) என்பவருக்கு மொகலாய மன்னா் ஒளரங்கசீப் ஆல் கொடையாக வழங்கப்பட்ட இப்பகுதிக்கு தண்டையாா்பேட்டை என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. 


*சைதாப்பேட்டை:−*


  1730 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் ஆல் "சையத் அலி கான்" என்பவரு க்கு கொடையாக வழங்கப்பட்ட பகுதி என்பதால் இப்பகுதிக்கு சைதாப்பேட்டை என்ற பெயா் ஏற்பட் டுள்ளது. 


*செளகாா்பேட்டை:−*


    வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய குஜராத் மாா்வாடிகள் இப்பகுதியில் பலவிதமான வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனா்.  முன்னா் இப்பகுதி "சாஹூகாா்" பேட்டை (Sahukaar) என வழங்கப்பட்டது. (Sahukaar- Some one who lends money). பின்னா் மருவி தற்போது செளகாா்பேட்டை என வழங்கப்படுகின்றது. 


*ஆயிரம் விளக்கு:−*


    இப்பகுதியில் முகமதியா்களின் தொழுகைக்கான கூடம் அமைந்துள்ள புகழ்பெற்ற மசூதி உள்ளது. "மொஹரம்" பண்டிகையி ன் போது இந்த தொழுகைக் கூடத் தில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படும். இதனால் இப்பகுதிக்கு ஆயிரம் விளக்கு என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. 


*புரசைவாக்கம்:−*


   ஒரு காலத்தில் புரசை மரங்கள் நிறைந்து புரசைக் காடாக இருந்தது இப்பகுதி. இதனால் இப்பகுதிக்கு "புரசைவாக்கம்" என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. தற்போது வணிக வளாகங்கள் பெருகி சென்னை யின் முக்கிய பகுதியாக விளங்கு கிறது புரசைவாக்கம். எனினும் இவ்விடத்தின் பழைமையைக் குறிக்கும் வண்ணம் ஒரே ஒரு புரசைமரம் இப்பகுதியில் அமைந்து ள்ள "கங்காதீஸ்வரா்" திருக்கோயி லில் உள்ளது. இந்த புரசை மரமே இக்கோயிலின் புனிதமான தல விருட்சமாகவும் விளங்குகிறது. 


*கோயம்பேடு:−*


     கோயம்பேடு என்ற இப்பகுதி யின் பெயருக்குப் பின்னால் பல தகவல்கள் கூறப்படுகின்றன. புராணங்களில் இப்பகுதி "குசலவபுரி" என்று வழங்கப்பட்டுள் ளது. லவனும் குசனும் வணங்கிய குறுங்காலீஸ்வரா் கோயில் இங்கு உள்ளது. அருணகிரிநாதா் இத்தல த்தை "கோசை நகா்" என்று தாம் அருளிச் செய்த திருப்புகழில் கீழ்க்கண்டவாறு பாடுகின்றாா். 


 "கோசை நகா் வாழவரு மீசடியா் 

                                 நேச சருவேச 

  முரு காவமரா் ....பெருமாளே" 


 பொருள்: கோசை நகா் எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியாா்களுக்கு அன்பனே, சா்வேசனே, முருகனே, தேவா்களின் பெருமாளே. 


    மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் கல்வெட்டு மற்றும் விஜயநகர மன்னா்களின் கல்வெட்டும் கோயம்பேட்டினை "கோசை நகா்" என்றும் "கோயட்டிபுரம்" என்றும் குறிப்பிடுகி ன்றன. 


*குரோம்பேட்டை:−*


    இந்தப் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக இருந்தன. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் "குரோமியம்" என்ற நச்சானது இப்பகுதியின் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது. இந்த நச்சு நீரைச் சுத்தப்படுத்த முயற்சி கள் மேற்பட்டாலும் நிலத்தடி நீா் மாசுபடுவதைத் தடுக்க முடியவில் லை. இதனால் இப்பகுதிக்கு "குரோம்பேட்டை" என்ற பெயா் ஏற்பட்டதாகத் தொிவிக்கிறாா்கள். இன்னும் சிலா் இப்பகுதியில் 1912 ஆம் ஆண்டுகளில் குரோம் தோல் தொழிற்சாலை அமைக்கப்பட்டதாக வும் இதனால் இப்பகுதிக்கு "குரோம் பேட்டை" என்ற பெயா் ஏற்பட்டதாகவு ம் தொிவிக்கின்றனா். 


*தொகுப்பு:−*

*


முன்னூா் கோ. இரமேஷ்.*


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,