சாகித்ய அகாடமி விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா கந்தசாமி

  சாகித்ய அகாடமி விருதுபெற்ற புகழ்பெற்ற  எழுத்தாளர் சா கந்தசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஜூலை 31,  2020.  சா.கந்தசாமி 1940 ஜூலை 23 அன்று பிறந்தவர். அவருடைய 15-வது வயதில் 1955-ல் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். பள்ளி நாட்களிலேயே வாசிப்பு வேட்கை அவரிடம் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறது. சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர் சா. கந்தசாமி. 1940-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர். சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது. சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். எப்போதும் சோராது துடிப்புடன் ஏதாவது ஒரு செயல் திட்டத்தை மேற்கொண்டிருப்பார்.உடல்நலம் குன்றியிருந்த கடைசி நாட்களிலும்கூட ரயில் கதைகளைத் தொகுக்கும் பணியை முடித்து சாகித்ய அகாடமி வசம் ஒப்படைத்திருக்கிறார். காலத்தைச் செதுக்கிய கலைஞன் சா.கந்தசாமிComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,