இந்திய மல்யுத்த வீரர் தாரா சிங்

 
ஜூலை 12 - இன்று புகழ்பெற்ற இந்திய மல்யுத்த வீரர் தாரா சிங் நினைவு நாள் (2012)  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தர்மூசக் என்ற இடத்தில் பிறந்தார் (1928). தாராசிங் ரன்தாவா என்பது இவரது முழு பெயர். இவரது ஊர் ஊராகச் சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற்றார் . 1947-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு பல போட்டிகளில் வென்றார். 1954-ல் இந்தியா திரும்பியபின் இந்திய மல்யுத்த சாம்பியனாக உயர்ந்தார்.


1959-ல் முன்னாள் உலக சாம்பியனை வென்று காமன்வெல்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 1968-ல் அமெரிக்க சாம்பியன் லவ் தேஸை முறியடித்து ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து கனடா, நியுசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து நாட்டு வீரர்களை வென்றார்.

     தாரா சிங் 1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டத்தை வென்றவர். பின்னர் பல ஹிந்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.

இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் அவர் ஹனுமானாக நடித்தார். அதன் மூலம் அவர் மேலும் மக்களிடம் பிரபலமானார்.


அவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை நியமன  உறுப்பினராகவும் இருந்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,