மெல்லிசை மன்னர் எம். எஸ் விஸ்வனாதன் நினைவு நாள்

 


இன்று இசை மேதை - மெல்லிசை மன்னர் எம். எஸ் விஸ்வனாதன் நினைவு நாள் - ஜூலை 14 , 2015! பிறந்தது கேரளமாயினும் அவர் வளர்ந்தது வாழ்ந்தது முற்றிலும் தமிழ் மண்ணில் 1953-ஆம் ஆண்டில் வெளிவந்த எம். ஜி.. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு தனித்தும் டி. கே.ராமமூர்த்தியுடன் இணைந்தும் இசையமைத்துள்ளார்.

1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சென்னை திருவெல்லிக்கேணி கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு