செம்மங்குடி சீனிவாச ஐயர் பிறந்த நாள் இன்று.
ஜூலை 25,
செம்மங்குடி சீனிவாச ஐயர் பிறந்த நாள் இன்று.
இளம் வயதிலேயே “சங்கீத கலாநிதி“ விருதினைப் பெற்ற செம்மங்குடி சீனிவாச ஐயர், தஞ்சாவூர் மாவட்டத்தின் திருக்கோடிக்காவலில் 1908ஆம் ஜூலை 25இல் பிறந்தார். சீனிவாச ஐயர் எட்டு வயதிலிருந்து நாராயண சுவாமி ஐயர், விஸ்வநாத ஐயர், சுவாமிநாத ஐயர் போன்றோரிடம் கர்நாடக இசை பயின்றார். சீனிவாச ஐயர் தனது முதல் இசை நிகழ்ச்சியை கும்பகோணத்தில் 1926ஆம் ஆண்டு அரங்கேற்றினார்.
1927ஆம் ஆண்டு சென்னையில் இந்திய தேசிய காங்கிஸ் மாநாடு 1927-ஆம் ஆண்டு தொடங்கியது. அங்கு தனது கர்நாடக இசை அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார். அன்று முதல் கர்நாடக இசை ரசிகர்களின் மத்தியில் புகழ் பெற்றார். 1947ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருது, 1953ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூசன், பத்ம விபூசன், காளிதாஸ் சம்மன் விருது மற்றும் இசைத் துறைக்கான பல விருதுகளை சீனிவாச ஐயர் பெற்றுள்ளார்.
Comments