சுந்தர் பிச்சை
ஜூலை 12 - இன்று சுந்தர் பிச்சை என்றழைக்கப்படும் பிச்சை சுந்தர்ராஜன் பிறந்த நாள் இவர் இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்
சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.] இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்[6]. கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், பெற்றுள்ள 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு மற்றும் கூகுள் இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள்.
Comments