திராவிட லெனின் என்று அழைக்கப்படும் டாக்டர் டி.எம்.நாயர் நினைவு தினம் இன்று

 திராவிட லெனின் என்று அழைக்கப்படும் டாக்டர் டி.எம்.நாயர் நினைவு தினம் இன்று


* நீதித் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் டாக்டர்.நடேசனார், சர் பிட்டி தியாகராயருக்குப் பின் மூன்றாவது பெரிய தலைவர் தாரவார்ட் மாதவன் நாயர் ஆவார்.

சென்னை மருத்துவக் கல்லூரியிலும், பின்பு இங்கிலாந்திலும் மருத்துவம் பயின்று MPCM என்ற உயர்ந்த பட்டம் பெற்றார். பின்பு பிரான்சிலும் பயின்று ENT மருத்துவத்தில் பட்டமும், எடின்பரோ பல்கலையில் M.D.யும் படித்து மருத்துவத்தில் சாதனை படைத்தார்.

* காங்கிரசில் இருந்த டாக்டர் நாயர் 1915 இல் டெல்லி இம்பீரியல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் தோல்வியுற்றதே அவரது பொது வாழ்வில் நீதிக் கட்சியின் பக்கம் திரும்ப வைத்தது.

* அப்போது Dr.நடேசன், தியாகராயர் சந்தித்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர வற்புறுத்தி அவரை இயக்கத்தில் சேர்த்தனர். நீதிக்கட்சி 1920 இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு நாயரின் பணி அடித்தளமிட்டது.

தான் வாழ்ந்த 51 ஆண்டுக் காலத்தில் திருமணம் என்ற எண்ணம் கூட எழாமல் படிப்பு, பொதுவாழ்வு என்று திறந்த புத்தகமாய் வாழ்ந்தார் டாக்டர் .நாயர்.

டாக்டர்.நாயரின் மறைவுக்குப் பின் அவர் எதிர்பார்த்த நீதிக்கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு சாதனைகளை, சமூகத்திலும், அரசியலும் தங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தில் செய்து சாதனை படைத்தது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,