பாபு ஜெகசீவன்ராம் நினைவு நாள்
பாபு ஜெகசீவன்ராம் நினைவு நாள் இன்று.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஜெகசீவன்ராம் 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பீகார் மாநிலம், போஜ்புர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் பிறந்தார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.
பாபு என அன்பாக அழைக்கப்பட்ட இவர் தன்னுடைய 78வது வயதில் (1986) மறைந்தார்.
Comments