பேசும் புத்தகங்கள் / புளியேப்பம்/ புத்தக விமர்சனம்
பேசும் புத்தகங்கள்
இது நான் விமர்சனம் செய்யும் புத்தகங்களுக்கு தலைப்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று
புத்தக விமர்சனம்
இன்று
புளியேப்பம்
ஆசிரியர் நயினார்
எழிலினி பதிப்பகம் உரிமை
வழங்கிடும் விற்பனையும்
எமரால்டு பதிப்பகம்சென்னை -600008
கைப்பேசி :9840696574
விலை +ரூ.200/-
பக்கம் :162
கவிஞர் பத்திரிகையாளர். ஆரூர் தமிழ் நாடன்
அணிந்துரையில் சொன்னது போல் நயினார் ஒரு கவிதை திரு விழாவையே நம் கண் முன்னால் நடத்தி காட்டிஇருக்கிறார் என்பது உண்மையே
இவரது கவிதைகளை படிக்க படிக்க எங்கேயோ இந்த சம்பவங்கள் நிக ழ்ந்த தை போல் உணர் ந்தேன்
தினம் நம் வாழ் வில் சந்திக்கும் நிகழ்வுகள் தான்
நமக்கு கவிதை யா சொல்ல தெரியல
நயி னா ர் இந்த சமூக அவலத்தை புரட்டி போட
நாம் வேறு என்ன செய்ய முடிகிறது
தலைக்குனிந்து தான் நிற்கிறோம்
உழவனின் டைரி குறிப்பு
'டை கட்டி கை கட்டி ய அடிமை தொழிலுக்கு ஆடம்பரத்தின் கதவை திறந்து விட்டே காத்திருக்கிறது '
வறுமை
பசித்தவைஎல்லாம் தோழர்.
கிடைப்பதெல்லாம் புதையல்
கொடுப்பதெல்லாம் கடவுள்
இது
வறுமை வகுத்த சட்டம்.
காதல். பசி. சமுதாய கடமை. அரசியல். மதம் குடும்பம்
இப்படி இவை சார்ந்து நாம் பார்க்கும் நிகழ் வுகள் தான் இவர் கவிதைகள்
படித்த பின் அவை நம் நெஞ்சில்
ஜீரணம் ஆக போவது இல்லை
எல்லாம் சரியானால் தான்
ஜீரணம்
அதுவரை அவை ரணம்
படிக்க படிக்க ஆனந்தம். வார்த்தை விளையாட்டு இல்லாத கவி வரிகள்
பாமரனை படிக்க வைக்கும் எளிய நடை
ஆனால் அதன் பின்னர் ஒளிந்துள்ள சிந்தனை
வாழை ப்பழத்தில் ஊசி குத்து வது போல் நம்மை நெருட வைக்கிறது
புனைபெயரில் ஒளிந்து கொள்ளாமல்
புது வார்த்தை களை போட்டு மிரட்டாமல்
இந்த கவிஞர் இவ்வளவு நாள் எங்கே போனார் என கேட்டு வைக்கிறேன்
அனைவரும் படிக்க வேண்டிய கவிதை தொகுப்பு இது
அட்டை படம் ரவி பாலட். கவர்கிறது
வாழ்த்துக்கள் கவிஞர் நயினார் அவர்களுக்கு
அன்புடன்
உமா காந்தன்
Comments