ஜார்ஜ் ஈஸ்ட்மென் பிறந்த தினம்
உலகில் முதன் முதலில் வண்ண புகைப்படங்களை எடுத்த கோடக் கேமரா நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜார்ஜ் ஈஸ்ட்மென் பிறந்த தினம் வரலாற்றில் இன்று ஜூலை 12, 1854
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார். ஈஸ்ட்மன் தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார். தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கு, மருத்துவ உதவிகள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளை தாராளமாக வழங்கினார். தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ளார். இக்கொடையை பெரும்பாலும் ரோச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்திற்கும், மாசாசுச்செட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃவ் டெக்னாலஜி என்னும் பல்கலைக்கழகத்திற்கும் அளித்தார்
Comments