பெருந்தலைவர் காமராஜர்.
: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கொண்டாடப்படுகிறது.
'கல்விக் கண் திறந்த கர்ம வீரர்' என்று போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
இதனை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 'கல்வி வளர்ச்சி நாள்' இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மாணவ-மாணவிகள் இடையே காமராஜரின் சிறப்புகளை விளக்கச் செய்யும் இசை, மாறுவேடம், கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
: இன்று பெருந்தலைவர், படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்ம வீர்ர், பாரத ரத்னா, கிங் மேக்கர் என்று எல்லோராலும் பலவிதமாக பாராட்டி புகழப்படுகின்ற கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் 15 , ஜூலை 1903.
விருதுநகரிலே ஒரு சாதாரணக்
குடும்பத்தில் பிறந்து, போதிய
கல்வி கற்கவும் வசதியற்ற
சூழ்நிலையிலே வளர்ந்து,
வாழ்ந்து, பின்னர்
அரசியலிலே தொண்டராக
ஒரு மாபெரும்
கட்சியிலே இணைந்து,
தனது உழைப்பால், தொண்டால்
படிப்படியாக உயர்ந்தவர் தான்
பெருந்தலைவர் காமராஜர்.
அவரது சாதனைகள்
யாவுமே சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்தவைகள். இன்று அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும்அவரது சிலைக்கும் உருவப்படங்களுக்கும் போட்டிபோட்டு மாலை அணிவித்து அவரைப் பாராட்டி வாய்கிழிய பேசுவார்கள். ஆனால் ஒருவர் கூட 'நான் இனி எனது அரசியல் வாழ்வில் காமராஜரைப் போல நேர்மையாக நடப்பேன்' என உறுதி மொழி ஏற்க மாட்டார்கள்.
Comments