Thursday, July 28, 2022
மாஸ்கோவில் மிகப்பெரும் தீ
இன்று ஜூலை 28, 1493 - ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புனித நிகோலஸ் என்ற கிறித்தவ ஆலயத்தில் ஏற்றப்பட்டிருந்த மெழுகு வத்தி பட்டு முதலில் ஜன்னல்திரை தீப் பிடித்தது. அப்போது வீசிய பெரும் காற்று காரணமாக மாஸ்கோ நகர் முழுவதும் பரவியது. கிரெம்ளின் மாளிகை புனித மேரி ஆலயம் உள்ளிட்ட பெரும் கட்டிடங்கள் தீக்கிரையாயின. அக்காலத்தில் நவீன தீயணைப்பு சாதனங்கள் இல்லாததன் காரணமாக தீயை விரைந்து கட்டுப்படுத்த இயலவில்லை. இத்தீயினால் பெருத்த பொருட் சேதங்கள் உண்டான போதிலும் 200 பேர்கள் மட்டுமே மரணமுற்றனர் என்று சொல்லப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
கோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...
-
‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...
-
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி ( Government Yoga and Naturopathy Medical College and Hospital ) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவி...
No comments:
Post a Comment