ஆங்கில புரட்சிக் கவிஞன் ஷெல்லி நினைவு தினம்
ஆங்கில புரட்சிக் கவிஞன் ஷெல்லி நினைவு தினம் இன்று. ஆங்கில இலக்கிய உலகத்தில் புலவர் ஷெல்லியை அறியாதோர் எவருமிலர். நமது பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிஞர். பாரதியார், தன்னை ‘ஷெல்லிதாசன்’ என்ற புனைப் பெயருடனும் அழைத்ததுண்டு.
ஷெல்லி 1792 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அயர்லாந்து குடும்பத்தில் பிறந்தார். ஷெல்லி பரம்பரையான பிரபுக் குடும்பத்தில் செல்வ சிறப்புடன் பிறந்தார்.இவரது தந்தை திமோதி ஷெல்லி ஒரு பெரிய நிலப்பிரபு.பிரிட்டனில் இவரது தந்தை பிரிட்டனில் விக் கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர். ஷெல்லியின் அசாத்திய கொள்கைப்பிடிப்பும், தனித்துவ வாழ்க்கைமுறையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புகழை அடையவிடாமல் தடுத்தன. அவருடைய படைப்புகள் பலமுறை புறக்கணிக்கப்பட்டன அல்லது உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டன. அவர் இறக்கும்வரை அவருடைய ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டவில்லை. ஓசிமாண்டியாஸ், ஓட் டூ எ வெஸ்ட் விண்ட், டூ எ ஸ்கைலார்க், தி மாஸ்க் ஆஃப் அனார்க்கி அஃப் அனார்க்கி போன்ற தனிக்கவிதைகள் ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ஆங்கில கவிதையுலகில் அழியாப்புகழ் பெற்றிருக்கும் இவை, இன்று வரை செவ்வியல் கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர அடோனாய்ஸ், குயின் மாப், அலாஸ்டர், ரிவோல்ட் ஆஃப் இஸ்லாம், தி டிருயம்ஃப் ஆஃப் லைஃப் போன்ற புகழ்பெற்ற நெடுங்கவிதைகளையும், தி சென்சி, புரோமீத்தியஸ் அன்பவுண்ட் போன்ற மேடை நாடகங்களையும் ஷெல்லி எழுதியுள்ளார். முப்பதாண்டுகளே வாழ்ந்தாலும், ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான்கு தலைமுறைகளாக பல கவிஞர்கள் ஷெல்லியின் படைப்புகளால் உந்தப்பட்டு கவிதைகளை எழுதினார்
Comments