வியக்க வைக்கும் செயலை செய்த இளையராஜா

 





உனக்கு என்ன தெரியும் என்று கேட்ட வாலி... முதல் சந்திப்பிலேயே வியக்க வைக்கும் செயலை செய்த இளையராஜா

கவிஞர் வாலி மறையும் வரை தன்னை அப்டேட் செய்து கொண்டே இருந்த ஒரு மாபெரும் கவிஞன். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
மின் வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே" என்று இறப்பதற்கு முன்பு கூட தமிழகத்தில் நிலவி வந்த மின் தட்டுப்பாடு பிரச்சனையை வைத்து காதல் பாடல் எழுதியிருப்பார்

அத்தகைய கவிஞனுக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையே இருந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்

வளையோசை கல கல கலவென, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்று இருவரது கூட்டணியில் வந்த பல வெற்றிப் பாடல்களை பட்டியலிட்டுச் சொல்லலாம். இளையராஜா என்ற தலைப்பில் வாலி ஒரு கதையை கூட எழுதினாராம். அதனை படமாக்க சில முயற்சிகள் எடுத்தும் அது கை கூடாமலே போய் விட்டது.
கவிஞர் ராஜா இசையறிஞர் வாலி கவிஞர்களுள் வாலிக்கு மட்டுமே இசை தெரியும். ஒரு முறை இசையமைப்பாளர் தேவா பேசுகையில், தனக்கே ராகங்களில் சந்தேகம் வரும்போது வாலியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். அதே போல, இசையமைப்பாளர்களில் நல்ல தமிழ்ப் புலமை பெற்றவர் இளையராஜா. இருவரும் சேர்ந்து நெடுங்காலம் பயணித்ததற்கு இது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்
முதல் சந்திப்பு முதன் முதலில் வாலியிடம் இளையராஜாவை அறிமுகப்படுத்திய போது, உனக்கு தியாகராஜ கீர்த்தனைகள் தெரியுமா என்று கேட்டாராம் வாலி. அப்போது, திருப்பதி கோவிலில் இருக்கும் திரை விலக வேண்டும் என்பதற்காக தியாகராஜர் பாடிய கீர்த்தனையை இளையராஜா ஆர்மோனியப் பெட்டியில் வாசித்துக் காண்பித்தாராம். பண்ணையபுரத்திற்கும் திருவையாருக்கும் என்ன சம்மந்தம் என்று வாலி ஆச்சர்யப்பட்டுவிட்டாராம்
ராஜா இன்னொரு யானை அன்று மாலை, எப்படி எங்க ஊர் ஆட்கள் என்று பாரதிராஜா வாலியிடம் கேட்டாராம். அதற்கு, ஏற்கனவே சினிமாவில் MSV என்கிற ஒரு யானை இருக்கிறது. இப்போது இளையராஜா என்கிற யானை சினிமாவை ஆள்வதற்காக வந்திருக்கிறது என வாலி கூறினாராம். அது மட்டுமா, திரைப்பாடல்கள் எழுதுவதற்கு, வெண்பா எதற்குத் தேவை என்று இருந்த வாலிக்கு அதனை எழுதக் கற்றுக் கொடுத்ததே இளையராஜாதானாம். அதற்கு முன்னர் பலர் தனக்கு கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கற்றுத் தர முடியவில்லை என்றும், இளையராஜா வெறும் இரண்டே மணி நேரத்தில் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்றும், இன்று நான் சிறப்பான முறையில் வெண்பா எழுத முக்கிய காரணம் இளையராஜா என்றும் வாலி தனது புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு முறை கூறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,