பூப்பதை நிறுத்துவதில்லை செடிகள்
பூப்பதை நிறுத்துவதில்லை செடிகள்
எழுதிக்கொண்டே இருக்கும்
எனது பேனா போல நின்று ரசிக்க நேரமிருந்தால் மகிழும் பூஞ்செடிகள்
உங்கள் வேகம் உமக்கு உதிர்ந்த பூஞ்சருகுகள் உரமாகி செடி வளர்க்கும்
நித்தம் பூக்கள் பூக்கும்
வழி போக நேர்ந்தால் வலி போக்கிக்கொள்ளுங்கள் சில பூக்கள் மருந்தாகும்!
எழுத்துகளுக்கும் மணமும் நிறமும் உண்டு வசீகரிக்கும்..
ஓய்வாய் நொடிகள் பாக்கி உண்டா உங்களிடம்?
வாழ்தலுக்கான பயணத்தில் பயணத்தின் பாதையில் பூக்கள் மட்டுமா எதிர்பார்ப்பது முட்கள் சிலது
சிலாகித்து போகத்தான் செய்யும்
கீறியதா முட்கள் எனும்
கரிசனங்கள் எதிர்பார்ப்பதில்லை
முட்கள் தீண்டாமல் பயணிக்க
கற்றுத்தாருங்கள்
பூக்களின் வாசக் கிறக்கத்தில்
மயங்காதிருக்கவும் கற்றுத்தாருங்கள்
பயணிக்க வேண்டிய தொலைவுகள்
மிகப்பெரியது!
வாழ்தலுக்கான பயணத்தில்
பயணத்தின் பாதையில்
பூக்கள் மட்டுமா எதிர்பார்ப்பது
முட்கள் சிலது
சிலாகித்து போகத்தான் செய்யும்
கீறியதா முட்கள் எனும்
கரிசனங்கள் எதிர்பார்ப்பதில்லை
முட்கள் தீண்டாமல் பயணிக்க
கற்றுத்தாருங்கள்
பூக்களின் வாசக் கிறக்கத்தில்
மயங்காதிருக்கவும் கற்றுத்தாருங்கள்
பயணிக்க வேண்டிய தொலைவுகள்
மிகப்பெரியது...
ஞாபகங்களின் அடுக்குகளில்
எவ்வளவு தேடினாலும் கிடைப்பதேயில்லை ஒற்றை நொடி
பூக்கள் பூப்பது நொடிகளுக்கு
இடைப்பட்ட இடைவேளையில் தானே
எல்லாம் எண்ணிப்பார்க்க எனக்கும் ஒரு காலம் வசந்தமாக வசமாகி இருந்தது ...
பிடித்தமில்லை என பொய்யுரைத்தால் பூக்கள் மடியும் இன்னும் இனி எதற்கு அழகாகவேண்டும்
சூட்டிவிட விரல்களின்றிதான்
பூக்கள் எல்லாம் மயக்கத்தில்...
Comments