ஊரன் அடிகள்,

 " வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் 


திருச்சி சமயபுரத்தில் 22.5.1933 அன்று பிறந்த ஊரன் அடிகள்,சில ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தார்.

பின்னர் துறவறம் மேற்கொண்டு வடலூரிலேயே தங்கியிருந்து வள்ளலாரின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பும் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் என்ற அமைப்பை அங்கு உருவாக்கி,வள்ளலாரைப் பற்றி பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டார்.

அவர் எழுதிய பல 

நூல்களில்,

“இராமலிங்க அடிகள் வரலாறு”என்ற நூல் குறிப்பிடத் தக்கது.இந்நூல்,தமிழக அரசின் பரிசு பெற்றது.

“அருட்பெருஞ் சோதி அகவலுக்கு”அவர் எழுதிய விரிவான,எளிய உரையும் மிகச் சிறப்பான நூலாகும்.

அடிகளார்,

வள்ளலாரில் தோய்ந்த பழுத்த ஆன்மிக ஞானி,சிறந்த எழுத்தாளர்,சிறந்த பேச்சாளர்-அவர் ஒரு தகவல் பெட்டகம் என்று சொல்லலாம்.

சென்னையில் நடைபெற்று வந்த  வள்ளலார்-காந்தி விழாவில் இவரின் பங்களிப்பு மகத்தானது.

அவரது சொற்பொழிவுகளை பல ஆண்டுகள்(நண்பர் திரு.ஜனா அவர்களுடன்)கேட்டு பயன் பெற்றிருக்கிறேன்.

அவருடைய ஆன்மா அருட் பெருஞ் சோதியில் கலந்து இளைப்பாற வள்ளல் பெருமான் அருள் கூர்வாராக.

ஓம் சாந்தி;சாந்தி;சாந்தி.

N.அசோகன்

வள்ளலார் பெருந்தொண்டர் ஊரன் அடிகள் மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்," வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் உடல்நலக் குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தவத்திரு ஊரன் அடிகள் திருச்சி மாவட்டம், நரசிங்கமங்கலத்தில் பிறந்தவர் என்றபோதிலும் துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின்னர் வடலூரையே தனது வாழ்விடமாக்கிக் கொண்டவர்.வடலூர் சன்மார்க்க நிலையங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் அறங்காவலர் முதலிய பல நிலைகளில் பணியாற்றியவர் ஊரன் அடிகள்.

22 வயதிலேயே சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவியதுடன் எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். நூலாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராகவும் சொற்பொழிவாளராகவும் நிலைத்த புகழை ஈட்டியவர். மறைந்த முதல்வர் கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் ஊரன் அடிகள்.

அன்னாரது மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,