தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர். கா. மு. ஷெரீப் நினைவு நாள்
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர். கா. மு. ஷெரீப் நினைவு நாள் ஜூலை 7 பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கா.மு.ஷெரீபின் 27வது நினைவு நாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவையான நினைவுகள்...1914ம் ஆண்டு கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா ராவுத்தர்-பாத்துமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப். 5 வயது முதல் 14 வயதுவரை ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றார். சிறுவனாக இருந்தபோதே கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.
நிறைய நூல்களை எழுதி, பதிப்பகம் நடத்தி, பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய ஷெரீப். திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். 400க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?, அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா, உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கு வசனத்தையும் எழுதினார்.
Comments