பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரி, பிறந்த நாள்
பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரி, பிறந்த நாள் இன்று குத்தனுார் அய்யா சுவாமி ஐயர் - லலிதாங்கி தம்பதியின் மகளாக, 1928 ஜூலை, 3ல் பிறந்தார்
.
வித்வான், ஜி.என்.பாலசுப்ரமணியனிடம் சங்கீதம் பயின்றார்.
1946 முதல் திரைப்படங்களில் பாடி வந்தாலும், 1951ல், மணமகள் என்ற படத்தில், இவர் பாடிய, 'எல்லாம் இன்பமயம்...' என்ற பாடலும்,
மகாகவி பாரதியாரின், 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாடலும், இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.
சங்கீத கலாநிதி விருது பெற்றவர்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் இவரை நாடி வந்தது.
எம்.எல்.வசந்தகுமாரியின் குரல், வசந்தத்தைக் கூவி அழைக்கும் குயிலின் குரலைப் போன்றது
இவர் இசைப்பிரியர்களின் உள்ளங்களை தன் குரல் இனிமையால் ஆண்டார்
.
Comments