நடிப்பின் இமயம் நடிகர் திலகத்தைப் பற்றி கட்டுரையும் கவிதையும்

 நடிப்பின் இமயம்  நடிகர் திலகத்தைப் பற்றி

 கட்டுரையும் கவிதையும்தமிழ் திரையுலக வரலாற்றில் நடிப்பில் தனக்கென ஒரு தனி  சிறப்பை பெற்றிருந்தவர் நடிகர் திலகம் அவர்கள்


 நாடகத்தில் முதல் முறையாக நடித்து. வசன உச்சரிப்பில் தெளிவைத் தந்தது

 பராசக்தி என்ற படத்தில், பெருமாள் முதலியார் அவர்களின் உறுதுணையால், "பராசக்தி' படத்தில் அறிமுகமாகி, தனது தங்கை                கல்யாணிக்காக, நீதிமன்றத்தில், டாக்டர் கலைஞர் அவர்கள் வசனம் பேசி முதல் படத்திலேயே தமிழக மக்களின் பாராட்டை பெற்றார். தொடர்ந்து மனோகரா, ராஜா ராணி படத்தில் இவருடைய வசன உச்சரிப்பு மென்மேலும் நடிப்பில்  மெருகூட்டியது. பக்தி படமானாலும் சரி, சமூகப் படம் படமானாலும் சரி, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல்வேறு படங்களில் எந்த கதாபாத்திரம் ஆனாலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு நடிப்பின் சிகரமாக நடிப்புலகில் ஒரு பல்கலைக்கழகமாக வாழ்ந்தார்.


 நடிகர் திலகத்திற்கு சில வரிகள்


 நடிப்பில் சிகரம் தொட்ட பல்கலைக்கழகம்


 துடிப்பில் வியந்து பாராட்டியது உலகம்


 வசனங்களில் தெளிவைத் தந்த  உச்சரிப்பு


 வைத்தார் திரைப்படம் மீது நாளும் மதிப்பு


 ஏற்ற பாத்திரமாய் மாறிய  நடிகர்திலகம்


 தோற்றத்தில் நிஜமுகம் எங்குதான் போகும்


 நவரசமாய் நடிப்பில் காட்டியது சாதனை


 நாடக உலகம் கற்றுத்தந்த போதனை


 வேகமாய் நடப்பதில் காட்டிய தனிமுத்திரை


 ஏற்ற பாத்திரத்துடன்  இரசிக்குமிடம் வெண்திரை


 வரலாற்று  தலைவர்கள் வாழ்ந்தனர் இவர் வடிவாய்


 வையத்தில் கண்டனர் மக்கள் கலை வடிவாய்


 அழகான முகத்தில் அற்புதம் காட்டிய சீமான்


 அழகில்லையென  தெய்வமகனில் அழுதிட்ட 

கோமான்


 குரல்வளத்தில் நாளும் வலிமையைத் தந்தார்


 விரல்கள் பத்திலும் மெல்லசைவை தந்தார்


 தலையாட்டுவதில்  தனித்திறமையை தானாய் செய்தார்


 நகம் கடிப்பதிலும்  நல்லதொரு  நளினம் அமைத்தார்


 பாடும்போது நடிப்பில் பாவம் பிறக்கும்


 வாடும் போதும் காண்போர்க்கு கண்ணீரும் சுரக்கும்


 நடிப்பிற்கு முன்னுதாரணம் இவரென்றால் மறுப்பதில்லை


 இவர் வழியினைத் தொடராதவர் நடிப்பில் சிறப்பதில்லை


 வாழும்போது நட்சத்திரமாய்  ஜொலித்தவர்  அப்போது


 வானிலொரு நட்சத்திரமாய்  மாறிவிட்டார் இப்போது


முருக. சண்முகம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,