கே. ஆர். நாராயணன்
வரலாற்றில் இன்று -1997 – ஜூலை 25 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் வர்மா நாராயணன் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் இவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டி. என். செஷனை எதிர்த்து போட்டியிட்டு மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். தலித் ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும். 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர் நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் கே.ஆர். நாராயணன்
Comments