இசை மாமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பிறந்த நாள்
இன்று இசை மாமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பிறந்த நாள் ஜூலை 6, 1930
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில் பிறந்தவர். பாலமுரளி கிருஷ்ணா ஐந்து வயதிலேயே இசை ஆர்வம் காட்டினார். முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் பால முரளி கிருஷ்ணா.
இவர் வாங்கிய விருதுகள் கலை விலைக்குள் கட்டுப்படாதது. ஆனாலும் திமிர்ந்த ஞானம் என்பது அங்கீகாரங்களுக்குத் தலை வணங்குவதே பண்பாகும். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும், ஞானமும், ஆய்வும், கண்டுபிடிப்புகளும் பல பட்டங்களைப் பெற்றுத் தந்தன. அவற்றில் சில பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே போன்றவையாகும். 2 முறை தேசிய விருதுகளும் வாங்கியுள்ளார்
Comments