அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த நாள்


 அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை பிறந்த நாள் ஜூலை 2, 1958.  இவர் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோதவாடி என்ற ஊரில் பிறந்தவர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார் . இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்] (ISRO) தலைமை இயக்குனராகப் பணிபுரிந்தார், அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்

இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் ] தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.

அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை குறித்தான   நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை இது வரை பல சர்வதேச விருதுகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப்  பெற்றுள்ளார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி