வெனிசுலாவின் முன்னாள் அதிபர் "ஹூகோ சாவேஸ்" பிறந்த தினம்
தேர்தல் மூலமும் சொஷியலிசப் புரட்சியை உருவாக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டிய, வெனிசுலாவின் முன்னாள் அதிபர் "ஹூகோ சாவேஸ்" பிறந்த தினம் 1954 ஜூலை 28...
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை முதலாளித்துவ தொழில் மயக் கொள்கை மட்டுமே முன்னேற்றும் என்கிற மேற்கத்திய பொருளாதார ஆலோசனைகள் அடிப்படையற்றவை என்பதை சாவேஸ் தனது ஆட்சியின் மூலம் நிரூபணம் செய்தார். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் வளத்தை உலகமயமாக்கல் என்ற பெயரில் உலகப் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நிலை நாளும் அதிகரித்து வரும் நிலையில், தனது நாட்டு மக்களின் நல்வாழ்வை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்டு சாவேஸ் கடைபிடித்த தேசப் பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆகியுள்ளது.
ஒரு இளம் புரட்சியாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சாவேஸ், தனது 14 ஆண்டுக்கால ஆட்சியின் மூலம் வெனிசுலா நாட்டை மதிப்பிற்குரிய நிலைக்கு உயர்த்தினார். லெனின், மாவோ, எர்னஸ்டோ சேகுவாரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் வரிசையில் வரலாற்றில் நிலைத்து வாழும் பேரைப் பெற்று மறைந்துள்ளார் சாவேஸ்
Comments