ஐக்கிய அமெரிக்க நாடுகள் USA எனப்படும் நாடு பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்த நாள்
வரலாற்றில் இன்று ஜூலை 4 ஐக்கிய அமெரிக்க நாடுகள் USA எனப்படும் நாடு பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்த நாள் வட அமெரிக்க கண்டத்தில் இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விடுதலையை பிரகடனப்படுத்திய நாள் 1776 ஜூலை 4. முன்னதாக ஜூலை 2ம் தேதி பதிமூன்று மாநிலங்
களும் கூட்டாக விடுதலை தீர்மானத்தை நிறைவேற்றினர். தாமஸ் ஜெஃபர்சன் ஐ தலைவராகக் கொண்ட ஐந்து பேர் குழு வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிரகடனத்தை எழுதினார்கள். ஜூலை 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரகடனம் சில திருத்தங்களுக்கு பிறகு ஜூலை 4ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான தகராறுகள் பதற்றங்கள் அமெரிக்க விடுதலை போருக்கு காரணமாக அமைந்தன.
Comments