மங்கள் பாண்டே.
இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்படும் சிப்பாய்க் கலகம் உருவாக காரணமானவர் மங்கள் பாண்டே. 1827-ம் ஆண்டு, இதே நாளில்தான் உத்தரபிரதேசத்தில் உள்ள நாக்வா என்ற ஊரில் பிறந்தார் மங்கள் பாண்டே. பாரக்பூரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34-வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்தார்.
மங்கல் பாண்டே 1857-ம் ஆண்டு மார்ச் 29-ம் நாள் ராணுவ உயர் அதிகாரியைத் தாக்கி, சிப்பாய் கலகத்தைத் தொடக்கி வைத்தார். சிப்பாய் கலகத்தை கட்டுப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனி, கிளர்ச்சியில் ஈடுபட்ட மங்கல் பாண்டே மீது தேசதுரோக குற்றம் சாட்டி மரணதண்டனை விதித்தது. அந்த மங்கள் பாண்டே பிறந்த நாள் இன்று (ஜூலை 19, 1827 )
Comments