கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து

 


ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் வெந்து, கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 4 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர்.

பள்ளியின் கீழ்தளத்தில் மதிய உணவு சமைப்பதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த கீற்று ஓலைகள் அருகில் யாருமில்லாத தருணத்தில் தீப்பிடித்து பள்ளிக் கட்டடம் முழுவதும் மளமளவென்று தீ பரவியது.ஆசிரியர்கள் அனைவரும் முதலில் வெளியே ஓடித் தப்பித்தனர். கூரை வேயப்பட்ட மாடி வகுப்பறைகளில் மாட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகள் அனைவரும் குறுகலான படிக்கட்டில் ஒரே சமயத்தில் இறங்கி வெளியேற முடியாமையால் அவர்களில் பெரும்பாலானோர் தீயில் கருகி பரிதாமாக உயிரிழந்தனர்.

கும்பகோணத்தில் ஒவ்வொரு தெருவிலும் இரண்டு கோயில்கள் உண்டு. அனைத்து கோயில்களிலும் சேர்த்து நூற்றுக் கணக்கான தெய்வங்கள் உண்டு. தீப்பிழம்பில் சிக்கி நூற்றுக்கணக்கான குழந்தைகள் கூக்குரலிட்டு கதறிய ஒலி கும்பகோணம் நகரின் விண்ணைக் கிழித்தது. ஆயினும் அது அங்கிருந்த எந்த ஒரு தெய்வத்தின் காதிலும் விழாமற் போனது பரிதாபத்துக்குரியது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,