மனிதரில் மாணிக்கம்

 மனிதரில் மாணிக்கம்....மாண்புமிகு செனட்டர் டத்தோ டி.மோகன் 

தேசிய உதவித் தலைவர்,  

மலேசிய இந்திய காங்கிரஸ் 


ஒரு பன்மைத்துவ சமூகத்தில், உறவுகளின் தன்மை மற்றும் வடிவத்தை புரிந்து கொள்ள, அரசியல் ஒரு முக்கிய அம்சமாகும். இது பெரும்பாலும் அதிகாரம், கொள்கை உருவாக்கம், செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது மற்றும் முதிர்ச்சியடைந்த சமுதாயத்தை உருவாக்கும் முதல் சக்தியைக் கொண்டுள்ளது. அதைச் சாத்தியப்படுத்த நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட அரசியல் தலைவர்கள் தேவை. ஆனால் இந்த நேர்மையற்ற உலகில் நேர்மையான அரசியல்வாதி கிடைப்பது அரிது. "புகழின்" மீது வெறிபிடித்த இந்தப் பொருள்முதல்வாத உலகில், "சன்மானம்" எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாக உதவும் அரசியல்வாதிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.


இருப்பினும் எல்லா அரசியல்வாதிகளும் அப்படி இருப்பதில்லை. வஞ்சகமான இந்த அரசியல் உலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள். "சேற்றில் தான் செந்தாமரை மலரும்" என்று சொல்வார்கள். நான் கண்டு என் மனதில் மலர்ந்த ஒரு "தாமரை", எங்கள் அண்ணன் மாண்புமிகு செனட்டர் டத்தோ டி.மோகன்.


அண்மையில் அவருடன் நான் சந்தித்த ஒரு அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் எனக்கு நன்கு அறிமுகமான கார்ப்பரேட் பிரமுகர் ஒருவர் தொழில் நிமித்தமாக ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் சென்றிருந்தார். (சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் பிரமுகரின் பெயர் மற்றும் அவர் சென்ற ஐரோப்பிய நாடு இந்த சூழலில் வெளியிடப்படவில்லை. அவர் கடந்து வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்).


அந்த ஐரோப்பிய நாட்டில் இருந்தபோது, ​​அந்த கார்ப்பரேட் பிரமுகர் ஒரு நகரத்திலிருந்து (A) இன்னொரு நகரத்திற்கு (B) உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்திருந்தார். ஆனால், அந்த நாட்டின் விமான நிறுவனத்துடன் கசப்பான அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்த பிறகு அவரால் பயணத்தை சுவாரசியமாக அனுபவிக்க முடியவில்லை. விதிகளையும், புறப்படும் நேரத்தையும் கடைப்பிடித்து சீக்கிரம் வந்தவர், “போர்டிங் ரூல்ஸ்” கடைபிடிக்காமல் தாமதமாக வந்த மற்ற பயணிகளுக்காகக் காத்திருந்து, தான் ஏறிய விமானம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக புறப்படும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த நபர் தன் செல்ல வேண்டிய நகரத்திற்கு சென்றடைய இணைப்பு விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது. விமானம் தாமதமாக புறப்பட்டதால், அவர் இணைக்கும் விமானத்தை தவறவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, "போர்டிங் நேரத்திற்கு" இணங்கினாலும் அவர் விமான நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டார். விமான நிறுவனம் காட்டும் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறை அவருக்கு மனஉளைச்சலும் சிரமங்களும் உருவாக்கியுள்ளது.


ஏமாற்றத்துடன், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவுகள் என் கண்களில் விழுந்தது, என் இதயத்தை அழுத்தியது. எழுதிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதை வாட்டியது. தனது காலணிகளைக் கழற்றிவிட்டு, "இ-இமிக்ரேஷன்" கவுண்டருக்கு ஓடி, கனெக்டிங் ஃப்ளைட்டைப் பிடிக்க முயர்ந்தும் தோல்வியில் முடிந்தது. இந்த அனுபவத்தால் அவர் எவ்வளவு மனவேதனை அடைந்தார் என்பதைக் காட்டியது. 


இந்த கார்ப்பரேட் நபர் எனக்கு பல விஷயங்களில் உதவியுள்ளார். நன்றி கடனாக அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக உள்ளுக்குள் ஒரு எண்ணம் இருந்தது. இந்த வீசியதில் அவருக்கு எதோ ஒரு உதவி செய்ய வேண்டும் என்று என் மனம் என்னை கட்டாயப்படுத்தியது. அவருக்கு உதவ, நான் இந்த விஷயத்தை அந்த ஐரோப்பிய நாட்டிலுள்ள மலேசிய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், ஆனால் தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நான் ஒன்னும் செல்வாக்கு மிக்க நபர் அல்ல.


எப்படி உதவுவது?.....என்று என் மூளையை அலைக்கழித்தபோது, ​​என் நினைவுக்கு வந்த ஒரே பெயரும், ஒரே முகமும் எங்கள் அண்ணன் மாண்புமிகு செனட்டர் டத்தோ டி.மோகன் தான். ஏனென்றால் என் தொடர்பில் உள்ள பல அரசியல்வாதிகளில், மக்களுடன் நட்புடன் பழகும் அரசியல்வாதி இவர் ஒருவர் தான். நான் அவரைத் தொடர்பு கொண்டு இந்த நிகழ்வை அவரது கவனத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளேன். மக்களின் நாடித் துடிப்பையும் குரலையும் எப்போதும் உணர்ந்து செயல்படும் அவர், அந்த ஐரோப்பிய நாட்டிலுள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார். கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த கார்ப்பரேட் நண்பரின் விவரங்கள் மற்றும் அவரது விமானத் தகவல்களையும் செனட்டர் டத்தோ டி. மோகனின் தொலைபேசிக்கு அனுப்பியுள்ளேன். ஒரு மணி நேரத்திற்குள் தூதரகத்திற்கு போன் செய்து இதுபற்றி தெரிவித்தது என்னை திகைக்க வைத்த ஒன்று. தூதரகம் அந்த கார்ப்பரேட் நபரைத் தொடர்பு கொண்டு, அவருக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தை பற்றியும் மற்றும் பிற தகவல்களைக் கேட்டறிந்தனர். மாண்புமிகு தூதர் அவரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை விமான நிறுவனத்திற்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததால், அந்த கார்ப்பரேட் நபர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இந்த விஷயத்தை செனட்டர் டத்தோ டி.மோகனிடம் கொண்டுவந்து அவருக்கு உதவ நான் முயற்சி எடுத்தேன் என்பது அவருக்கு தெரியாது. எனவே, தூதரிடமிருந்தும் தூதரகத்திலிருந்தும் அவருக்கு அழைப்பு வந்ததும், அவர் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டார். ஆனால், இந்த விஷயத்தை நான் செனட்டர் டத்தோ டி.மோகனிடம் கொண்டு வந்துள்ளேன் என்றும், அதை தூதரகத்திற்குப் பரிந்துரைக்க அவரது உதவியைக் கேட்டதாகவும் அவருக்கு நான் செய்தி அனுப்பியபோது,  அவரது ஆச்சரியத்திற்கு பதில் கிடைத்தது. இதற்கு முன்பு எனக்கு நிறைய உதவிய ஒரு கார்ப்பரேட் பிரமுகருக்கு நான் ஒரு உதவியைச் செய்ய முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். 


கார்ப்பரேட் பிரமுகர், "You are an absolute gem." என்று என்னை பாராட்டி ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். உண்மையைச் சொல்லப்போனால், குறிப்பிட்ட ஐரோப்பிய நாட்டிற்கான மலேசியத் தூதரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில் அக்கறை செலுத்தி தனது முயற்சியை மேற்கொண்ட செனட்டர் டத்தோ டி.மோகனுக்குத் தான் பாராட்டுகள் குவிய வேண்டும். அவர் கவனத்திற்கு என்னால் கொண்டுவரப்பட்ட விஷயங்களில் உதவி வழங்குவது இது முதல் முறையல்ல. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக அவரை அறிந்த இந்த காலகட்டத்தில், நான் அவரது கவனத்திற்கு கொண்டு வந்த பல விஷயங்களில் அவர் தனது உதவிக்கரம் நீட்டியுள்ளார். 


அண்ணன் ஒரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் (Senator) என்பதால், அவரைப் பற்றி செய்திகள் மூலம் இந்த கார்ப்பரேட் பிரமுகர் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் பழக்கமில்லை. இந்த உதவியின் மூலம் இவர் மனதிலும் அண்ணன் ஒரு தாமரையாக மலர்ந்துள்ளார். அவரது உதவியால் ஒவ்வொரு மக்களின் மனதிலும் மலர்ந்த தாமரைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், அது நிச்சயமாக தாமரைகள் நிறைந்த அழகான குளமாக மாறும் என்று சொன்னால் அது மிகையாகாது. 


கார்ப்பரேட் பிரமுகரிடம் பெருமையாக சொன்னேன், "எங்கள் அண்ணனுக்கு தெரியாத ஆளே இல்லை, அண்ணனை தெரியாத ஆளும் இல்லை"


இந்த விஷயத்தில் அவர் செய்த உதவிக்கு நான் குரல்பதிவு அனுப்பி நன்றி தெரிவித்தபோது, ​​பதிலுக்கு அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார், "Raj, I just did my role as a politician. Politics is about helping others regardless of race, status and ranking. Thank you"... 


இந்த அரசியல் உலகில் இன்னமும் மக்கள் மீது அக்கறையும், அவர்களின் நலன்களை வலியுறுத்தும் துடிப்புள்ள நல்ல அரசியல்வாதிகள் வாழ்கிறார்கள் என்பதை அண்ணனின் செயல் பேசுகிறது. நமது நாட்டின் திசையும் எதிர்காலமும் இது போன்ற அரசியல்வாதிகளையே சார்ந்துள்ளது. இந்த அரசியல் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருக்கலாம். போகும் பாதையில் ஆங்காங்கே கல்லும் முள்ளும் நிறைந்திருக்கலாம். பொறுமைக்கு சவாலாகவும் இருக்கலாம். அண்ணணின் நேர்மை நெஞ்சமும் அவருக்குள் இதயத்துடிப்பாக புகுத்தப்பட்ட சமூக அக்கறையும், அவரை மனஉறுதி மிக்க அரசியல் தலைவராக செதுக்கியுள்ளது. அவருடைய முயற்சிகள், சேவைகள் மற்றும் பங்களிப்புகள் அனைத்தும் கடவுளின் அருளால், இந்த இயற்கையின் ஆசிர்வாதத்தால் மென்மேலும் பசுமையாகட்டும். அவரது அரசியல் பயணம் சிறகு விரிந்து சிகரத்தை தொட பிரார்த்திக்கிறேன். 


கல்லை பிளந்து,   

நீர் எடுத்து; 

காற்றை பிழிந்து,  

சாறு எடுத்து; 

எரிமலைக்கு சரிமலையாய்...  

இன்று நாம் சமூகத்திற்கு எழுந்து 

வழிகாட்டுகிற தலைவனாக 

திகழ்ந்து கொண்டிருக்கிறார் 

நம் அண்ணன் டத்தோ டி.மோகன்


நல்லோர் நலம் குறையினும்,

செய்த நன்மை துணையிருக்கும்...🙏


என்றும் அண்ணனின் 💕 

அன்பின் நிழலில், 
ராஜ் குமார் (மலேசியா )

(டிவிட்டர் : @RajGreatEastern

Comments

Raj Kumar Karuppiah said…
டத்தோ டி.மோகன் அவர்களை பற்றி நான் வர்ணித்த வார்த்தைகளை உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமைக்கு நன்றி. நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,