மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண், சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டி நினைவு நாள்

 : இன்று மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண், சமூகப் போராளி முத்துலட்சுமி ரெட்டி நினைவு நாள் ஜூலை 22, 1968


சென்னை மாகாணச் சட்டசபையில் பங்குபெற்ற முதல் பெண். புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் புனித நம்பிக்கையாக இருக்கும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை உருவாக்கியவர். அபலைப் பெண்களின் வாழ்க்கைக்கு அடைக்கலமாக ஓர் இல்லம் வேண்டும் என்று ‘அவ்வை இல்லம்’ தொடங்கியவர். அவர்தான், ‘ஒரு தெய்வம் நேரில் வந்தது’ என்று சொல்லத்தக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் இயற்ற தொடர்ந்து பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.  இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்கள் தடைச் சட்டம், ஏழைப்பெண்களுக்கு இலவசக் கல்வி ஆகிய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றினார். ஈடிணையற்ற சமூக சேவைகளுக்காக பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளும், கவுரவங்களும் பெற்றார். மகத்தான சமூக சேவகியும், தலைசிறந்த மருத்துவரும், பெண்களின் முன்னேற்றத் திற்காக பாடுபட்டவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, 1968-ல் 82-ம் வயதில் மறைந்தார்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி