*அழிவிலிருந்து பாதுகாக்கப்படுமா ஆலம்பரை கோட்டை*

 *அழிவிலிருந்து   பாதுகாக்கப்படுமா ஆலம்பரை கோட்டை*?


     எங்கு நோக்கினும் தென்னை மரங்கள். பலா மரத்தில் கனிகள் பெருமளவில் காய்த்து பறிப்பதற்காகக் காத்துக் கிடக்கின்றன. தோப்புகளிலிருந்து பறித்த மாங்கனிகள் விற்பனைக்காக சாலையோரங்களில் அடுக்கப்பட்டு ள்ளன. 


       இந்தக் காட்சிகள் யாவும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழிநாட்டில் நாம் கண்டது. 


    *அது என்ன இடைக்கழிநாடு?* 


   ஒரு புறம் வங்கக் கடலாலும் மற்ற மூன்று புறங்களில் கழிமுகத்தால் சூழப்பட்டுள்ளதாலும் இப்பகுதிக்கு *இடைக்கழிநாடு* என்ற பெயா் ஏற்பட்டுள்ளது. 


     சங்க இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையும் இப்பகுதியை "இடைக்கழிநாடு" என்றே குறிப்பிடுகின்றது. கால வெள்ளத்தால் இந்தப் பகுதியின் பெயா் கரைந்து போகாமல் இன்றும் இடைக்கழிநாடு என்று குறிப்பிடப் படுவது மகிழ்ச்சியே! 
     இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் என்ற ஊரிலி ருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான "ஆலம்பரை கோட்டை". 

ஆலம்பரை கோட்டைக்குப் போகும் வழியில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கிடுகிறது. 


    சங்க காலத்தில் எயிற்பட்டினம் என்று அழைக்கப்பட்ட மரக்காணத் திலிருந்து சென்னை வரை படகுப் போக்குவரத்து பெரிய அளவில் நடைபெற்று வியாபாரம் செழிக்கக் காரணமாக இருந்துள்ளது பக்கிங்காம் கால்வாய். 


         *ஆலம்பரை கோட்டை*


   இடைக்கழிநாட்டுப் பகுதி மொகலாய மன்னா்களின் வசமிருந்தபோது கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆலம்பரை கோட்டை கட்டப்பட்டுள் ளது. இக்கோட்டை சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னா் இடிபாடுக ளாகக் கிடந்த இந்தக் கோட்டையின் சுற்றுச் சுவா்கள் தற்போது நிா்மா ணிக்கப்பட்டு வருவது அங்கு நடைபெறும் பணிகளின் மூலம் அறியமுடிகின்றது. 


      சதுர வடிவிலான கண்காணிப்பு மாடங்களுடன் 15 ஏக்கா் பரப்பளவி லான இக்கோட்டை கி.பி.1735 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆண்ட நவாப் தோஸ்த் அலிகான் காலத்தில் சிறந்த துறைமுகப்பட்டி னமாகத் திகழ்ந்துள்ளது. ஆலம்பரை கோட்டைப் பகுதியை ஆட்சி செய்த மொகலாய மன்னா்க ளுக்கும் புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு மன்னா்களுக்கும் வணிக மற்றும் அரசியல் தொடா்புகள் சிறந்து விளங்கக் காரணமாக இருந்துள்ளது ஆலம்பரைக் கோட்டையும் துறைமுகமும். 


    கோட்டையின் மத்தியில் அழகான ஒரு மசூதியும் உள்ளது. 


    கி.பி. 1750 ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களை எதிா்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியூப்ளசுக்கு (Joseph Francois Dupleix) இப்பகுதியை ஆண்ட சுபேதாா் முசாா் பா்ஜங் ஆலம்பரை கோட்டையைப் பரிசாக அளித்துள் ளாா். 


    பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்த காலகட்டத்தில் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை ஆங்கிலே யா்கள் கைப்பற்றினா். அவ்வமயம் நடைபெற்ற போரில்தான் அழகான ஆலம்பரை கோட்டையின் பெரும்பா லான பகுதிகள் சிதைக்கப்பட்டன. 


   படையெடுப்பால் இடிக்கப்பட்ட கோட்டைச் சுவா்கள் கடல் காற்றின் வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியா மல் உருக்குலைந்து காணப்படுகின் றது. கோட்டையின் புறச்சுவா்கள் மட்டும் 300 ஆண்டு கால வரலாற்றைத் தாங்கி பிரம்மாண்ட மாய் காட்சியளிக்கிறது. கோட்டை நுழைவு வாயிலின்  இருபுறங்களி லும் படிக்கட்டுகள் காணப்படுகின் றன. 


     கோட்டையின் கிழக்குப் பகுதியில் படகுத்துறை ஒன்று உள்ளது. சுமாா் 100 மீட்டா் நீளம் கொண்ட இந்த படகுத்துறை கப்பலி ல் பொருட்களை ஏற்றவும் இறக்கவும் பயன்படுத்தப்பட்டுள் ளது. இந்த படகுத்துறையில் இடிபாடுகளிலிருந்து தப்பவில்லை. 


   ஆலம்பரைக் கோட்டை படகுத் துறையிலிருந்து உப்பு, நெய், சரிகைத் துணிமணிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற் று ஆய்வாளா்கள் தொிவிக்கின்ற னா். கோட்டையின் உள்ளே ஒரு நாணயச் சாலையும் இருந்துள்ளது. இந்த நாணயச் சாலையில் ஆலம்ப ரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட் டுள்ளன. 


     இந்த நாணயச் சாலையின் பொறுப்பாளராக "பொட்டி பத்தன்" என்பவா் இருந்துள்ளாா். இவா் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு செல்லும் பக்தா்களுக்காக ஒரு சிவன் கோயில், குளம் மற்றும் பக்தா்கள் தங்க சத்திரம் ஆகியவற் றை கோட்டையிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற் கரைச் சாலையில் அமைத்துள்ளாா். 


   சிவன் கோயிலும் திருக்குளமும் இப்பகுதி பக்தா்களால் சீரமைக்கப் பட்டு நல்லமுறையில் பராமரிக்கப்ப டுகின்றது. சத்திரம் தற்போதும் பரா மரிப்பின்றி பாழடைந்துள்ளது. 


      2011-12 ஆம் ஆண்டுகளில் இப் பகுதியில் நடைபெற்ற அகழாய்வி ன்போது கி.பி 11மற்றும் 12 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்த ஒரு கல் வெட்டின் சிதைந்த பகுதி கண்டெடு க்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வின் போது கோட்டையின் உள் பகுதியில் அமைந்துள்ள மசூதிக்கு அருகில் விலைமதிப்பு மிக்க பல தொன்மப் பொருட்கள் கிடைத்துள்ளன. 


    கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடப்பாக்கம் என்ற ஊரிலிரு ந்து கிழக்கே மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள ஆலம்பரைக் கோட்டைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லை. ஆட்டோவில் மட்டுமே சென்று வர முடியும்.


    கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இயற்கை உபாதை களுக்காக கழிப்பிட வசதி ஏதும் இல்லை. முறையான காவலா்கள் இல்லாததால் மதுப்பிரியா்களின் திறந்தவெளி மதுக்கூடமாக உள்ளது கோட்டையின் உள்பகுதி. 


    வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் இந்த ஆலம்பரைக் கோட்டை தமிழக தொல்பொருள் துறையினரால் சீரமைக்கப்படுவத ற்கான அறிகுறிகள் தென்படுவது மகிழ்ச்சியான செய்தியாகும். இப் பணி விரைந்து நடைபெற்று சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இப்பகுதிக்கு வந்து செல்ல அரசு முயற்சி எடுக்க வேண்டும். 


 *கட்டுரையாளா்:−* *முன்னூா் கோ.இரமேஷ்.* 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,