சென்னை என அதிகாரபூர்வமாக அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் பெயர் மாற்றப்பட்ட தினம்

 


மெட்ராஸ்" சென்னை என அதிகாரபூர்வமாக அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் பெயர் மாற்றப்பட்ட தினம் இன்று (1996). மதறாஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை ஆங்கிலேயர்கள் வாய்த்த பெயரான மெட்றாஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது . அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன. 1991-ல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. 1995-ல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே. 1996 ஜூலை 17-ல், மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ‘மெட்ராஸ்’ அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் இதற்கென நிறைவேற்றாப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் இப்பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,