‘வெற்றி விழா’ மட்டுமல்ல... ‘ஜீவா’வும்

 Robert Ludlum எழுதிய ‘The Bourne Identity’ நாவல்தான் சட்டென பிரதாப் போத்தன் குறித்து நினைக்கும்போதெல்லாம் ஃப்ளாஷ் ஆகும். 



இந்த நாவல் வெளியான சூட்டோடு சூடாக அதைத் தழுவி எழுத்தாளர் ஷண்முகப்ரியன் ஒன்லைன் அமைத்து, கே.ராஜேஷ்வருடன் இணைந்து கதை, வசனம் எழுத... இவ்விருவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன் திரைக்கதை அமைத்து ‘வெற்றி விழா’ படத்தை இயக்கினார்.


சட்டென மனதிலும் ஒட்டிக் கொண்டார். 


‘வெற்றி விழா’ மட்டுமல்ல... ‘ஜீவா’வும் ஆங்கில நாவல் ஒன்றின் தழுவல்தான்.


உலகளவில் The Bourne Identity நாவலின் சாரம் முதன்முதலில் திரைப்படமாக்கப்பட்டது தமிழில்தான். ஹாலிவுட்காரர்கள் அதன் அருமையை உணருவதற்கு முன்பே இதன் நறுமணத்தை நுகர்ந்தவர் பிரதாப் போத்தன். 


ஏ.சி.திருலோக சுந்தருக்கு அடுத்தபடியாக தரமான ஆங்கில கமர்ஷியல் நாவல்களை, தான் புழங்கும் மொழியில் திரைப்படமாக்கியவர் என பிரதாப் போத்தனை குறிப்பிடலாம்.


அதனாலேயே கமர்ஷியல் பட டைரக்டராக வலம் வந்தாலும் தரமான வெகுஜன இயக்குநராக அறியப்பட்டார்.


இறுதி வரை தொடர்ந்து வாசிப்பில் ஈடுபட்டதும், எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியதும், திரைப்படத்துறையில் கதாசிரியருக்கு முக்கியத்துவம் தந்ததும் இவரது பலம்.


தனக்கான அங்கீகாரத்தை அவர் பெறவும் இல்லை; அதற்கு முயற்சிக்கவும் இல்லை.


தனது 70வது வயதில் இன்று காலை காலமாகிவிட்டார்... சென்று வாருங்கள் சார்...


  thanks கே. என். சிவராமன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,