பிரபல மலையாளக் கவிஞர் நாலாபத் பாலாமணி அம்மா (Nalapat Balamani Amma) பிறந்த நாள்

 


சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல மலையாளக் கவிஞர் நாலாபத் பாலாமணி அம்மா (Nalapat Balamani Amma) பிறந்த நாள் இன்று (ஜூலை 19).

கேரளத்தின் திருச்சூர் மாவட்டம் நாலாபத் என்ற ஊரில் (1909) பிறந்தார். பெண்கள் பள்ளியில் சேர்க்கப்படாத காலம் என்பதால், வீட்டிலேயே மலையா ளம், சமஸ்கிருதம் கற்றார். மலை யாளத்தின் சிறந்த எழுத்தாளரும், தத்துவமேதையுமான இவரது மாமா நாலாபத் என்.நாராயண் மேனனின் படைப்புகள் மூல மாகவே இலக்கியம் கற்றார்.

இலக்கிய சூழலில் வளர்ந்த அனுபவம் இவரது சிந்தனைக்கு வளம் சேர்த்தது. சிறு வயதிலேயே கவிதைகள் எழுதினார். 'கூப்புக்காய்' என்ற இவரது முதல் கவிதை 1930-ல் வெளிவந்தது. தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1959 முதல் 1986 வரை இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு 'நைவேத்தியம்' என்ற தொகுப்பாக வெளிவந்தது. 'அம்மா', 'குடும்பினி', 'ஸ்திரீ ஹ்ருதயம்', 'லோகாந்தரங்களில்', 'அவர் பாடுன்னு', 'சொப்பனம்', 'சந்தியா', 'அம்மா', 'மழுவின்டே கதா' உள்ளிட்ட படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது கவிதைகளில் உள்ள வார்த்தைகள், கவிதை பாணி, நுட்பமான உத்திகள் தனித்துவமானவை. 500-க் கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதினார்.

முத்தாஸ்ஸி' என்ற படைப்புக்காக கேந்திரீய சாகித்ய அகாடமி, கேரள சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றார். இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. கணவருடன் இணைந்து தனது பல படைப்புகளை பல மொழிகளில் மொழிபெயர்த்தார். பிரபல கேரள எழுத்தாளர் கமலாதாஸ் இவரது மகள்.


தாய்மையின் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலையாள இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவருமான நாலாபத் பாலாமணி அம்மா, 95-வது வயதில் (2004) மறைந்தார். தங்கள் பங்களிப்பு மூலம் கேரள இலக்கியத்தை வளப்படுத்துவோருக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,