சோழர்கள் நெற்றியில் நாமம் அணிவதில்லை




அரசுடமை ஆகி விட்ட அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலுக்கு 30 வருட பெரும் முயற்சிக்கு பிறகு திரை வடிவம் கொடுத்த  மணிரத்னம். 


சோழர்கால வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை அமரர் கல்கி எழுதியது என்றாலும் சோழர்களின் வரலாற்றை மணிரத்னம் ஆய்வு செய்து இந்த படத்தின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார். அதே சமயம் இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் நெற்றியில் நாமம் அணிந்திருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது வழக்கறிஞர் செல்வம் என்பவர் இது குறித்து மணிரத்தினம் மீதும் விக்ரம் மீதும் நீதிமன்றத்தில் கேச் போட்டுட்டார்.


அதில், சோழர்கள் நெற்றியில் நாமம் அணிவதில்லை என்றும் அவர்களது கதாபாத்திரத்தை இதில் தவறாக சித்தரித்துள்ளார்கள் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தை தனக்கு பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் அதில் வேறு ஏதேனும் காட்சிகள் இதுபோன்ற இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே இந்த படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.


அதே சமயம் விக்ரம் நடித்துள்ள கரிகாலன் கதாபாத்திரம் ஒரு மாவீரன் மற்றும் இளவரசன் கதாபாத்திரம். அவர் போருக்கு கிளம்பும்போது வெற்றி திலகமாக குங்குமம் தரித்து செல்வது போன்று தான் அவரது புகைப்படம் இருக்கிறது. இதில் ஏன் குறை கண்டுபிடிக்கிறார்கள் என்று பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வாராய்ங்க.


From The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,