செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு
நேற்று (02.08.2022) செங்கல்பட்டு மாவட்டம் நாகல்கேணி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அனகாப்புதூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 13முதல் 18 வரை உள்ள வளர இளம் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வை தலைமை ஆசிரியர்கள் ஒப்புதலுடன், இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் குழந்தை நல ஆர்வலரும் ஆகிய திருமதி கோமளா சிவகுமார் அவர்கள் பயிற்சியை மேற்கொண்டார். இந்த பயிற்சியில் பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்த நிகழ்வின்போது ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தைகள் அவருக்குள்ளலான சந்தேகங்களை தெளிவாக கேட்டு புரிந்து கொண்டனர். இந்த நிகழ்வின் முடிவில் பெண் குழந்தைகளுக்கு துணிகளால்லான நாப்கின்கள் கொடுக்கப்பட்டது. குழந்தைகள் அனைவரும் புதியதாக பல விஷயங்களை கற்றுக் கொண்டோம் என்று விழிப்புணர்வு பயிற்சி அளித்த திருமதி கோமளா சிவகுமார் அவர்களிடம் நன்றி தெரிவித்து சென்றனர்கள்.
----அல்லாபக்ஷ்
Comments