சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் நெய்வேலி லெட்ஸ் டூ டிரஸ்ட் (இணைந்து செயல்படுவோம்) தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்திய தையல் மற்றும் அழகுக்கலைப் பயிற்சி

 





கடலூர் மாவட்டம் தண்டீஸ்வரநல்லூரில் குழந்தை திருமணத்தின் மூலம் மீட்க மற்றும் பள்ளி இடைநின்ற ஏழை பெண்களுக்கு சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மற்றும் நெய்வேலி லெட்ஸ் டூ டிரஸ்ட் (இணைந்து செயல்படுவோம்) தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்து  நடத்திய தையல் மற்றும் அழகுக்கலைப் பயிற்சி வகுப்புகள் 02.08.2022 அன்று நிறைவுபெற்றது. 

அவற்றை முன்னிட்டு 05.08.2022,வெள்ளிக்கிழமையன்று மூன்று மாதம் பயிற்சி நிறைவு விழாவில் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி. சித்ரா அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினார்.லெட்ஸ் டூ டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் திருமதி.பொ.ஞானஜெயந்தி அவர்கள் தொழிற்பயிற்சி பயிற்சியாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் தையல் மற்றும் அழகுக்கலைப் பயிற்சிக்கு தேவையான பொருட்களையும் வழங்கினார். மேலும்.,தண்டீஸ்வரநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவர் திருமதி. சுந்தரி அவர்கள் சிறப்புரை கொடுத்தார்.

கீர்த்தனா பிருத்விராஜ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,