*உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7

 


*உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7 : ஏன் கொண்டாடப்படுகிறது..? இந்நாளின் முக்கியத்துவம் என்ன*


*உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தீம் எனும் கருப்பொருளுடன் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் "தாய்ப்பால் பாதுகாத்தல்  அனைவருக்குமான பொறுப்பு" என்பதாகும்.*


*தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது. உலகளாவிய அளவில் தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,20,000 குழந்தை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.*


*இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2019-20ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5) படி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறையில் கவலை அளிக்கும் போக்கு காணப்படுகிறது என தெரியவந்துள்ளது.*


*ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதிவரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,