ஆகஸ்ட் 11, 1954 துப்பாக்கிச் சூடு,
தென் தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட ஆகஸ்ட் 11, 1954 துப்பாக்கிச் சூடு,
கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி மார்த்தாண்டம் நகரில்நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கு கொண்ட 16 பேர் திருவாங்கூர் சமஸ்தான காவல்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர். அதனைத் தொடர்ந்து நேசமணி போன்ற தலைவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு மொழிவாரி கமிஷன் பரிந்துரையின்படி 1956 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, தூவாலை, அகத்தீஸ்வரம், விளவங்கோடு, செங்கோட்டை முதலான பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன
Comments