ஐசக் சிங்கர் (Isaac Singer)
ஆகஸ்ட் 12, 1851 - வரலாற்றில் இன்று – ஐசக் சிங்கர் (Isaac Singer) தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் பிறந்தவரான சிங்கர் பின்னர் பாஸ்டன் நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு தையல் எந்திரங்களை பழுது பார்க்கும் மெக்கானிக்காக பணி புரிந்தார் அவருக்கு முன்னரும் தையல் எந்திரங்கள் இருந்தன. அவை ஒரே நேர் கோட்டில் மட்டுமே இயங்க கூடியவை. சிங்கர் கண்டு பிடித்து உருவாக்கிய தையல் எந்திரம் துணியின் பரப்பில் எந்த வடிவத்திற்கும் வளைந்து கொடுத்து தைக்க கூடிய வசதியை அளித்தது. துவக்கத்தில் இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை குறைக்கப்பட்டு தனி நபர்களும் வாங்க கூடிய அளவுக்கு குறைந்தது
Comments