உலக யானைகள் தினம்:

 


இன்று ஆகஸ்ட் 12 - உலக யானைகள் தினம்: 

தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்கு ஆகும். யானைக் கூட்டத்துக்கு தலைவர் கிடையாது. தலைவி மட்டும்தான் உண்டு. பெண் யானைதான் தலை வியாக இருந்து, யானைகள் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படும். அதனால், யானைகள் சுற்றுச்சூழலின் ஆரோக்கி யத்தைக் காட்டும் அடையாளமாகக் கருதப்படுகிறது.

யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல். காட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், விறகு பொறுக்குதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப் படுகின்றன. காடு செழிக்க யானைகளை வாழ விடுங்கள்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,