திரைப்பட இசையமைப்பாளர், வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி அவர்களின் நினைவு நாள்
ஆகஸ்ட் 2, 2013 -இன்று தேசிய விருது உள்பட சுமார் அறுபது விருதுகள் பெற்ற பிரபல பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர், வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி அவர்களின் நினைவு நாள் ஆகும்
இவர் கர்நாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாககொண்ட வர் தட்சிணாமூர்த்தி 1948-ல் வெளிவந்த “நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது.
நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.”ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்ரஹ்மான் இளம் வயதில் தட்சிணாமூர்த்தியின் இசையில் கீபோர்டு வாசித்துள்ளார். இளையராஜா. அவரது மகள் பவதாரிணியும் இவரிடம் கர்நாடக இசை பயின்றவர். மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் போன்றவைப் பெற்றுள்ளார்
Comments