மெகல்லனின் பயணம்
வரலாற்றில் இன்று - உலகைச் சுற்றி வந்த முதல் மனிதரான ஃபெர்டினான்ட் மெகல்லன், 1519-ம் ஆண்டு ஆகஸ்ட் 10 இதே நாளில்தான் தனது கடற்பயணத்தைத் தொடங்கினார். போர்ச்சுக்கல்லில் பிறந்த மெகல்லன், சிறுவயதில் கொலம்பஸின் கடற்பயணத்தைக் கேள்விப்பட்டு, புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.
மலாக்கா, மொராக்கோ போன்ற பல நாடுகளுக்குச் சென்ற மெகல்லன், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு அமெரிக்காவைக் கடந்தும் செல்ல முடியும் என ஸ்பெயின் அரசர் முதலாம் சார்லஸிடம் சொல்ல உடனடியாகத் தொடங்கியது அவரின் கடற்பயணம். 5 கப்பல்கள், 241 பேருடன் 1591-ம் ஆண்டு இதே நாளில், ஸ்பெயினில் உள்ள செர்வில்லா என்ற இடத்திலிருந்து தொடங்கியது, உலகைச் சுற்றி வரும் மெகல்லனின் பயணம். இதுவே அவரின் முதல் கடற்பயணம். கேரளாவின் கோவா, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் அவர் சில காலம் தங்கியுள்ளார்.
Comments