இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள்


 இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182 ஆனது, (#IPC) ஒருவருக்கு கேடு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பொது ஊழியரிடம் தவறாக கொடுக்கப்படும் தகவல் பொய் #தகவல் ஆகும். இதற்கு 6 மாத காலம் சிறை தண்டனை மற்றும் #அபராதம் விதிக்கப்படும்.


அதேபோல பிரிவு 193 ஆனது, நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் போது #பொய் #சாட்சி-யம் அளித்தல் குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


செல்வம் என்பவரின் குடும்பத்திற்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதன்காரணமாக செல்வம் வகையறாக்கள் கண்ணன் என்பவரை தூண்டி விட்டு நாகராஜ் மீது ஒரு எப்ஐஆரை (#FIR) போட்டனர்.


அதேபோல் 2016 ஆம் ஆண்டில் செல்வத்தை நாகராஜ் அரிவாளால் வெட்ட முயன்றதாக ஒரு பொய் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் நாகராஜ் ஒரு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். அதனை அறிந்து கொண்ட காவல்துறையினர் அந்த வழக்கை Mistake of Fact என்று முடித்து விட்டனர்.


பின்னர் நாகராஜ், பழனியப்பன் என்பவரை தாக்கியதாக ஒரு புகாரை பொய்யாக காவல் நிலையத்தில் அளித்தனர். அதனையும் காவல்துறையினர் Mistake of Fact (#MF) என்று முடித்தனர்.


இவ்வாறு தொடர்ந்து தன்மீது பொய் #புகார்-களை செல்வமும் அவரது தந்தையும் அளித்து இம்சை செய்து வருவதாக கூறி நாகராஜ் காவல்துறையில் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் பாதிக்கப்பட்ட நாகராஜ் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் (#CrPC)  எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 182 & 193 ன் கீழ் தாமாகவே விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு செல்வம் மற்றும் அவரது தந்தைக்கு சம்மன் அனுப்பியது.


அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி செல்வமும், அவரது தந்தையும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.


வழக்கை விசாரித்த நீதிபதி இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 182 மற்றும் 193 ன் கீழான குற்றச்சாட்டுகளை குறித்து நடுவர் நீதிமன்றம் தானாக விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த பிரிவுகளின் கீழ் வழக்கை விசாரிக்க வேண்டுமானால் பொது ஊழியர் ஒருவரின் எழுத்துப்பூர்வமான புகார் இருக்க வேண்டும். இதுகுறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 195(1)(a)(i) தெளிவாக கூறுகிறது. எனவே இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 182 மற்றும் 193 ஆகியவைகளுக்காக தனிநபர் ஒருவர் private #complaint தாக்கல் செய்ய இயலாது. பொது ஊழியர் அல்லது அவருடைய உத்தரவின் பேரில் கீழ்நிலையில் உள்ள ஒரு அலுவலர் புகார் கொடுத்தால் மட்டுமே நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறி செல்வம் மற்றும் அவரது தந்தை மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,