விக்ரம் சாராபாய் அவர்களின் பிறந்த நாள்

 


இன்று இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய் அவர்களின் பிறந்த நாள் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும் இயற்பியலிலும் தான் இருந்தது. பள்ளி மாணர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய் கம்யூனிட்டி அறிவியல் மையத்தை நிறுவினார்.

l இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை வகுத்தார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விக்ரம் சாராபாய். 1957ல் ரஷ்யா முதல் செயற்கைக்கோளை ஏவியபோது உடனே இந்தியாவும் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் என்று அறிவித்தார் விக்ரம் சாராபாய். சொன்னபடியே செய்தும் காட்டினார். சாட்டிலைட் இல்லாத வாழ்க்கையை நம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி இத்துறையில் இந்தியா அசாதாரண வளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் அவர்தான்.

அணுசக்தி அறிவியலின் தந்தையான ஹோமிபாபாவின் மறைவுக்குப் பிறகு அணு ஆராய்ச்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அணு ஆயுதத்தைக் காட்டிலும், அணு மின்சாரம்தான் முக்கியம் என்று புதிய வளர்ச்சிப் பாதையை வகுத்தார் அவர்.

SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.அப்துல்கலாம் அவர்களின் கு௫வும் இவர்தான். அந்த மாமனிதர் பிறந்த தினம் இன்று

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,