மொக்கையாக இருக்கும் கத்தி, கத்திரிக்கோல், 2 நிமிஷத்தில் ஷார்பாக மாற்ற

 மொக்கையாக இருக்கும் கத்தி, கத்திரிக்கோல், அருவாமனை, இவைகளை வீட்டில் இருந்தபடி 2 நிமிஷத்தில் ஷார்பாக மாற்ற இந்த ஐடியா போதும்.


சமயத்தில் அவசர அவசரமாக காய்கறி, வெங்காயம் வெட்டும்போது தான் அருவாமனை, கத்தி மொக்கையாக இருக்கும். உடனடியாக அதை ஷார்ப் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால் அந்த வழிகளை எல்லாம் உடனடியாக நம்மால் பின்பற்ற முடியாது. சாணை பிடிக்க வேண்டும் என்றாலும் கடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது வீதியில் சாணை பிடிப்பவர் வரும்வரை காத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்து உடனடியாக மொக்கையான பொருட்களை ஷார்பாக மாற்ற ஒரு சுலபமான, செலவு இல்லாத குறிப்பு இதோ உங்களுக்காக. அதற்கு முன்பாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். வீதியில் சைக்கிளில் சாணை பிடிப்பவர்கள் வந்தால் அவர்களிடம் உங்களுடைய கத்தையை கத்திரிக்கோல் அருவாமனையை சாணை பிடித்தால், ரொம்பவும் பேரம் பேசி விலையை குறைக்காதீர்கள். அவர்களுக்கு கிடைக்க கூடிய 10, 20 ரூபாய் லாபத்தை குறைக்காதீங்க.வீட்டிலேயே கத்தி கத்திரிக்கோல் அருவாமனையை ஷார்பாக மாற்ற நாம் பயன்படுத்தப் போகும் பொருள் உப்பு காகிதம். பத்து ரூபாய்க்கு மலிவாக இந்த உப்பு காகிதத்தை வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் போதும். தேவைப்படும்போது எழுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய நீளமான கரண்டி அல்லது மரக்கரண்டி எதை வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மரத்தால் செய்த தோசை கரண்டி இருந்தால் கூட போதும்.

அடுத்து உப்பு காகிதத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தோசை கரண்டியின் பின் பக்கத்தில், இந்த உப்பு காகிதத்தை சுருட்டி ஒரு ரப்பர் பேண்ட் போட வேண்டும். அந்த அளவிற்கு தேவையான உப்பு காகிதத்தை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கரண்டியின் பின்பக்கம் இந்த காகிதத்தை வைத்து சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். சாணை பிடிக்க உப்பு காகிதம் தயாராகி விட்டது.

ஒரு கையில் சாணை பிடிக்க வேண்டிய கத்தி, மறுக்கையில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உப்பு காகித கரண்டி. கத்தியை சாணை பிடிக்க வேண்டும் என்றால், கத்தியை வெட்டும் பகுதியை, இந்த கரண்டியின் மேல் சுருட்டி வைத்திருக்கும் உப்பு காகிதத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். கத்தியின் இரண்டு பக்கங்களையும் மாற்றி மாற்றி அந்த உப்பு காகிதத்தில் லேசாக அழுத்தம் கொடுத்து தேய்த்துக் கொடுத்தால், ஒரு நிமிடத்தில் கத்தி சார்பாக மாறிவிடும். இதே போல் தான் உங்கள் வீட்டில் இருக்கும் கத்திரிக்கோல் அருவாமனையையும் இந்த உப்பு காகிதத்தில் தீட்டி பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே தெரியும்.

இப்படி உப்பு காகிதத்தில் தீட்டி ஷார்ப் செய்த பொருட்களை உடனடியாக எலுமிச்சம் பழம் தோலை வைத்து தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு காய்கறிகள் வெட்டுவதற்கோ, பால் பாக்கெட் வெட்டுவதற்கோ, வெங்காயம் வெட்டுவதற்கோ நீங்கள் ஷார்ப் செய்த பொருட்களை பயன்படுத்தும் போது நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். சாணை பிடிக்கும் அளவிற்கு இதில் ரிசல்ட் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடையாது. ஓரளவுக்கு 10 நாட்கள், 15 நாட்கள் பயன்படுத்துவதற்கு தேவையான ஷார்ப் உங்களுக்கு கிடைத்துவிடும். அவசரத்துக்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

thanks>https://dheivegam.com/kaththi-sanai-pidikka-tips/Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,