துன்பம் விலகி... வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் ஆவணி அவிட்டம் வழிபடு!*


துன்பம் விலகி... வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் ஆவணி அவிட்டம் வழிபடு!*


ஆவணி அவிட்டம் என்பது பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் கடை பிடித்து வரும் ஒரு சடங்காகும். இந்த நாளில் உபநயனம், அதாவது...  ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் ஆண்களால் கடைபிடிக்கப்படும் ஒரு வழிபாடு.

 

ரிக்,யசுர்வேதிகள் படிப்பவர்கள் இந்த நாளில் தங்களுடைய பூ நூலை மாற்றி கொள்வது வழக்கம். சாம வேதங்கள் படிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் பூ நூல் மாற்றி கொள்வார்கள். 


பொதுவாக கூட்டு வழிபாடாக கொண்டாடப்படும் இந்நாளில், ஆண்கள் ஆற்றங்கரையிலோ அல்லது குளக்கரையிலோ குளித்து விட்டு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.


சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கூறுவார்கள். ஆவணி அவிட்டம் விரதம் எடுப்பதால், பூணூல் அணிந்து கொள்வதாலும் எவ்வித துன்பமும் அவர்களது குடும்பத்தை நெருங்காது என்பது ஐதீகம். எதிரிகள் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சி அவர்களது வாழ்க்கையில் மேலோங்கும் என முன்னோர்கள் கூறுவார்கள்.

*

[10/08, 3:57 pm] +91 99407 62319: *சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு*


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த சாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசிற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் பறந்தது.


மேலும், இந்த அரசு விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என்று கலாச்சார பேரவை தலைவர் சிவன் கண்டித்திருந்தார். இதனையடுத்து, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 2001-ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை; தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.   

...Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்